Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹெட்போன் வாங்க நினைக்கிறீர்களா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!

Headphone Guide: முன்பு பாடல்கள் கேட்பதற்கு மட்டுமே ஹெட்போன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைய நவீன உலகில் அலுவலக அழைப்புகள், மீட்டிங், பயணம், கேமிங் போன்ற பல வேலைகளுக்கு ஹெட்போன் தேவைப்படுகிறது. இந்த கட்டுரையில் ஹெட்போன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.

ஹெட்போன் வாங்க நினைக்கிறீர்களா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Aug 2025 19:32 PM

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஹெட்போன் (Headphone)  என்பது வெறும் இசை கேட்கும் கருவி மட்டுமல்ல. வேலை சார்ந்து அலுவலக அழைப்புகள், மீட்டிங், கேமிங், பயணம், உடற்பயிற்சி என பல்வேறு விஷயங்களுக்கு ஹெட்போன்கள் பெரிதும் உதவுகின்றன. இப்போதெல்லாம் நவீன ஹெட்போன்களில் ஏஐ (AI), ஸ்மார்ட் நாய்ஸ் கேன்சலைசேஷன், மல்டி டிவைஸ் மேனேஜ்மென்ட், 3டி சவுண்ட் போன்ற பல வசதிகளுடன் கிடைக்கின்றன. நம்முடைய பட்ஜெட் மற்றும் தேவையின் அடிப்படையில் ஹெட்போன்களை தேர்ந்தெடுக்கலாம். சில பிராண்ட்களுக்கு ஏற்ப வசதிகளும் கிடைக்கும். இந்த நிலையில் ஹெட்போன் வாங்கும்போது அடிப்படையாக கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஹெட்போன்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

நாய்ஸ் கேன்சலைசேஷன் வசதி

சில உயர்தர ஹெட்போன்கள் நாம் இருக்கும் சூழல், கேட்கும் விஷயங்களைப் பொறுத்து தானாகவே ஆடியோவை சீரமைக்கும்.  குறிப்பாக இசை, பாட்காஸ்ட், சினிமா என நாம் பார்க்கும் கண்டென்ட்களுக்கு ஏற்ப அமைப்புகளை தானாக மாற்றும். உதாரணமாக நீங்கள் அமைதியான அறையில் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்பவும், சத்தம் நிறைந்த சாலையில் நடக்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்பவும் நாய்ஸ் கேன்சலைசேஷன் வசதிகள் செயல்படும். இந்த அம்சம் அடிக்கடி பயணிப்பவர்கள், தொழில்முனைவோர்கள் போன்றவர்களுக்கு ஏற்றது. அவர்கள் ஹெட்போன்கள் வாங்கும்போது இந்த அம்சங்கள் இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ளவும்.

இதையும் படிக்க : Smart Ring : ஸ்மார்ட் வாட்ச் போலவே அறிமுகமான ஸ்மார்ட் ரிங்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை கனெக்ட் செய்யும் வசதி

இன்றைய ஹெட்போன்கள் பலவற்றில் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் என ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை இணைக்க முடியும். சில ஸ்மார்ட்போன்கள் தானாகவே நாம் பயன்படுத்தும் டிவைஸ்களை கண்டறந்து கனெக்ட்டகும். இதனால் டிவைஸ்கள் மாறும்போது வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.  அடிக்கடி  ஹெட்போன் பயன்படுத்துபவர்கள் இந்த வகை ஹெட் போனை தேர்ந்தெடுக்கலாம்.

ஹெட்போனின் தரம்

நீடித்த பயன்பாடுகளுக்கு ஹெட்போன்களின் தரம் மிகவும் முக்கியம். கார்பன் ஃபைபர் ஃபிரேம்கள், குளிர்ச்சி தரும் மெமரி ஃபோம் குஷன் ஆகியவை சிறந்த மாடல்களாக கருதப்படுகின்றன. உடற்பயிற்சி செய்பவர்கள், நடைபயிற்சி செய்பவர்கள் இது போன்ற ஹெட்போன்களை வாங்கி பயன்படுத்துவது நல்லது. நல்ல ஹெட்போனின் வடிவமைப்பு நீண்ட காலத்தில் அசௌகரியத்தை தவிர்க்கும்.

3 ஆடியோ வசதி

தற்போது நவீன ஹெட்போன்களில் 3டி ஆடியோ வசதிகளுடன் ஹெட்போன்கள் கிடைக்கின்றன. இது திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை தருகின்றன. அடிக்கடி படம் பார்ப்பவர்களுக்கு இந்த வகை ஹெட்போன்கள் ஏற்றது.

இதையும் படிக்க : இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

வெளி சத்தத்தையும் கேட்கும் வசதி

டிரான்ஸ்பிரன்ஸி மோட் என்ற வசதியும் இருக்கிறது. இந்த வசதி வெளியே கேட்கும் சத்தத்தையும் நம்மால் கேட்க முடியும். இந்த வசதி பயணம் செய்யும்போது, அலுவலகத்தில் அல்லது சாலையில் நடக்கும்போது நமக்கு பாதுகாப்பு அளிக்கும். குறிப்பாக சாலையில் நடைபயிற்சி செய்கிறவர்களுக்கு வாகனங்களின் ஒலியைக் கேட்க இந்த வகை ஹெட்போன்கள் உதவிகரமானதாக இருக்கும்.

இது தவிர பேட்டரி மேனேஜ்மென்ட் வசதி இருக்கிறதா என பார்த்து வாங்கலாம். ஏஐ அடிப்படையில் இயங்கும் இந்த அம்சம், நாம் பயன்படுத்தாத நேரங்களில் ஹெட்போனை ஸ்லீப் மோடுக்கு மாற்றும். இதனால் பேட்டரி வீணாவது தடுக்கப்படும்.  அதே போல விரைவாக சார்ஜ் செய்யும் வசதி. இதன் மூலம் சில மணி நேரங்களில் ஹெட்போன்கள் சார்ஜ் ஆகும்.