Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Flipkart Freedom Sale 2025: பிராண்டட் போன்களுக்கு கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள் – உங்கள் சாய்ஸ் எது?

Flipkart Independence Day Sale 2025 : இந்தியாவில் ஃபிளிப்கார்ட் ஃபிரீடம் சேல் ஆகஸ்ட் 13, 2025 அன்று முதல் துவங்குகிறது. குறிப்பாக ஐபோன், சாம்சங், மோட்ரோலா, போன்ற பிராண்ட்டட் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

Flipkart Freedom Sale 2025: பிராண்டட் போன்களுக்கு கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள் – உங்கள் சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Aug 2025 19:51 PM

நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஃபிளிப்கார்ட் ஃபிரீடம் சேல் 2025 (Flipkart Independence Day Sale 2025) இந்தியாவில் ஆகஸ்ட் 13, 2025 முதல் துவங்குகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 1 முதல் 8, 2025 வரை நடைபெற்ற ஃபிரீடம் சேலிற்கு பிறகு இது சுதந்திர தினத்தை (Independence Day) முன்னிட்டு நடைபெறும் இரண்டாவது பெரிய தள்ளுபடி விற்பனையாகும். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் (Smartphone) வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. இந்த கட்டுரையில் ஆப்பிள், மோட்ரோலோ (Motrolo), ஒப்போ, விவோ (Vivo) போன்ற பல பிராண்டட் ஸ்மார்டபோன்களை தள்ளுபடியில் வாங்க முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்

ஓப்போ கே13 5ஜி (Oppo K13 5G)

இந்த ஸ்மார்டபோன் ரூ.15,999 விலை கொண்ட இந்த போனை 25 தள்ளுபடியுடன் ரூ.11,999க்கு வாங்கலாம். ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் தள்ளுபடியும் கிடைக்கும். சிறப்பான பேட்டரி ஆயுள், ஏஐ அம்சங்கள் என பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் இதன் கேமரா வசதி குறைவானதாக இருக்கிறது.

இதையும் படிக்க : இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24)

இதன் தனித்துவமான டிசைன், Vibrant 120Hz டிஸ்பிளே, Capable processor மற்றும் கேமரா அம்சங்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. இதன் குறைவான பேட்டரி ஆயுள் இதில் பிரச்னையாக கூறப்படுகிறது. இதன் விலை ரூ.74,999 என்று கூறப்படும் நிலையில் ஃபிளிப்கார்ட்டில் 37 சதவிகித தள்ளுபடியுடன் ரூ.46.999க்கு கிடைக்கிறது.

ஐபோன் 16 (iPhone 16)

இதில் 6.10 இன்ச் டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் மற்றும் 12 மெகா பிக்சல் கேமரா, 12 மெகா பிக்சல் முன் பக்க கேமரா, 8ஜிபி ரேம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ.79,900 என்று கூறப்படும் நிலையில், 9 சதவிகிதம் தள்ளுபடியுடன் ரூ.72, 499க்கு கிடைக்கிறது.

இதையும் படிக்க : ஆகஸ்டில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

மோட்ரோலா எட்ஜ் 60 5ஜி (Motorola Edge 60 5G)

இதில் 12 GB RAM, 256 GB ROM, மற்றும் 6.67 இன்ச் டிஸ்பிளே, 50எம்பி+50MP+50MP ரியர் கேமரா, 50 MP ஃபிரண்ட் கேமரா , 5500 mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இதன் விலை ரூ.31,999 என்று கூறப்படும் நிலையில் ரூ. 25,999க்கு ஃபிளிப்கார்டில் கிடைக்கிறது.