ஆகஸ்டில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
August 2025 Smartphone Launches | ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் ஆகஸ்ட் 2025-ல் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட வரிசை கட்டி நிற்கின்றன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த மாதம் மட்டும் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய வரிசை கட்டி நிற்கின்றன. குறிப்பாக கூகுள், விவோ, ஓப்போ, ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட தயாராக உள்ளன. இந்த நிலையில், புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் பிக்சல 10 சீரீஸ்
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Pixel 10 Series Smartphones) ஆகஸ்ட் 20, 2025 அன்று முதல் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் பிக்சல் 10, பிக்சல் 10 ப்ரோ, பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதுமட்டுமன்றி கூகுளின் முதல் மடிக்க கூடிய பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,999 முதல் ரூ.1.7 லட்சம் வரை செல்லலாம் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Vivo Y400 5G : இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
ரியல்மி பி4 ப்ரோ
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பி4 ப்ரோ 5ஜி (Realme P4 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 முதல் ரூ.30,990 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
விவோ வி6
விவோ நிறுவனத்தின் விவோ வி6 ஸ்மார்ட்போன் (Vivo V6 Smartphone) நாளை (ஆகஸ்ட் 12,, 2025) அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி சென்சார் மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செஃல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த ஸ்மார்ட்போனில் 6,500 ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!
ரெட்மி 15 சீரீஸ்
ரெட்மி நிறுவனம் தனது 15 சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனை (Redmi 15 5G Smartphone) ஆகஸ்ட் 19, 2025 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம், 7,000 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏஐ அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.