Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Flipkart Freedom Sale 2025: ரெட்மி Note 14 Pro+ 5G மாடலுக்கு 17% தள்ளுபடி!

Flipkart Freedom Sale 2025 : அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் அதிரடி தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் ஃபிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் ரெட்மி நோட் 14 புரோ பிளஸ் 5ஜி போன் தற்போது 17 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது.

Flipkart Freedom Sale 2025: ரெட்மி Note 14 Pro+ 5G மாடலுக்கு 17% தள்ளுபடி!
ரெட்மி நோட் 14 புரோ
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Aug 2025 19:39 PM

அமேசான் (Amazon) மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் ஃப்ரீடம் சேல் என்ற பெயரில் மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்திருக்கின்றன. குறிப்பாக டிவி, ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன. இதனால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குவதற்கு இது சிறந்த காலகட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜியோமி ரெட்மி நோட் 14 புரோ பிளஸ் 5ஜி போனுக்கு ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் (Flipkart Freedom Sale 2025) 17 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ரூ.39,999 கொண்ட இந்த போனை, ஃபிளிப்கார்ட்டில் ரூ.32,999க்கு வாங்கலாம். கூடுதலாக ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு 5 சதவிகிதம் வரை கேஷ்பேக் கிடைக்கும்.

மொபைலின் சிறப்பம்சங்கள்

இந்த ரெட்மி நோட் 14 புரோ பிளஸ் 5ஜி போன், 12ஜிபி ரேம் உடன் வருகிறது. இந்த போனின் ஸ்கிரீன் 6.67 இஞ்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் பின்புற கேமரா, 50 எம்பி + 50 எம்பி + 8எம்பி டிரிபிள் கேமரா செட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் முன்புற கேமரா 20எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 6200mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பதால், ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும்.  மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 3 பிராசசர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் 5ஜி வசதி, டூயல் சிம் சப்போர்ட்டுடன் கிடைக்கிறது.

இதையும் படிக்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

இந்த ஸ்பெசிஃபிகேஷன்களுடன், ரெட்மி நோட் 14 புரோ பிளஸ் 5ஜி மொபைல், அதிக செயல்திறன், நேர்த்தியான பயன்பாடு மற்றும் நல்ல பேட்டரி லைஃப் கொண்ட போனை தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. மேலும் ஃபிளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5 சதவிகிதம் வரை கேஷ்பேக் பெறலாம். குறிப்பாக ஹைஎண்ட் மொபைல் வாங்குபவர்களுக்கு இந்த சலுகை பெரிதும் கை கொடுக்கும்.

ஃபிளிப்கார்ட் ஃபீரிடம் சேலில் வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

Redmi Note 14 Pro+ 5G இப்போது பல தரமான வசதிகளுடன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த வாய்ப்பை போன் வாங்குபவர்கள் ரூ.7,000 வரை வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மூலம் வாங்குபவர்கலுக்கு கூடுதலாக ரூ.4000 சேர்ந்து ரூ.11,000 வரை சேமிக்க முடியும். நடுத்தர வர்க்கத்தினருக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.  ஃபிளிப்கார்டில் இந்த அதிரடி சலுகை ஆகஸ்ட் 7, 2025 அன்று வரை மட்டுமே இருக்கும் என்பதால் தாமதிக்காமல் உடனே வாங்குவது சிறந்தது.