Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Amazon Prime Day 2025: பிரீமியம் இயர்போன்கள் மீது 78% வரை தள்ளுபடி! உங்க சாய்ஸ் எது?

Amazon Prime Day Deals : Amazon Prime Day 2025 என்ற பெயரில் பிரமாண்டமான தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக பிரீமியம் இயர்போன்களுக்கு 50 முதல் 68 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. குறிப்பாக சோனி, ஜேபிஎல், ஒன்பிளஸ் போன்ற பிராண்டுகளின் இயர்போன்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றன.

Amazon Prime Day 2025: பிரீமியம் இயர்போன்கள் மீது 78% வரை தள்ளுபடி! உங்க சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Jul 2025 18:48 PM

அமேசானின் பிரைம் டே 2025 (Amazon Prime Day 2025) என்ற பெயரில் அமேசான் மிகப்பெரிய தள்ளுபடிகளை அளித்திருக்கிறது. நீங்கள் விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபோயகப்பொருட்கள் உள்ளிட்டவற்றை மிகப்பெரிய தள்ளுபடியுடன் வாங்கலாம். இவை ஜூலை 12, 2025 முதல் ஜூலை 14, 2025 வரை மட்டுமே நடைபெறும். இந்த நிலையில் அமேசான் பிரைம் டே ஆன்லைன் ஷாப்பர்களுக்காக மிகப்பெரிய ஆடியோ விற்பனை களமாக மாறியுள்ளது. காரணம், சோனி (Sony), ஜேபிஎல், ஒன்பிளஸ், சென்ஹெய்சர், மார்ஷல், சாம்சங் (Samsung), ஆப்பிள் போன்ற முன்னணி பிராண்ட இயர்போன்கள் (Earphone) மற்றும் கேமிங் ஹெட்செட்களுக்கு 60 முதல் 78 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. உங்கள் விருப்பமான பிராண்ட் இயர்போன்களை குறைந்த விலையில் வாங்க இதுவே சரியான தருணம்.

பிரீமியம் பிராண்ட் இயர்போன்களுக்கு அமேசான் வழங்கும் தள்ளுபடி

தரமான சவுண்ட், நாய்ஸ் கண்ட்ரோல் வசதி, நீண்டநேர பாட்டரி பேக் அப் என வேண்டிய எல்லா வசதிகளும் நிறைந்துள்ள பிராண்ட் இயர்போன்களுக்கு அமேசான் வழங்கும் தள்ளுபடி குறித்து பார்க்கலாம்.

இதில் முதலாவது சென்ஹெய்சர் பிராண்டின் MOMENTUM TW4 என்ற இயர்போனுக்கு 42 சதவிகிதம் தள்ளுபடி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.29,000 கொண்ட இந்த இயர்போனை தள்ளுபடி விலையில் ரூ.17,330க்கு வாங்கலாம்.

  • சோனியின் Linkbuds Fit WF-LS910N என்ற இயர்போனுக்கு 39 சதவிகிதம் தள்ளுபடி கிடைத்துள்ளது. இதன் மூலம் ரூ.24,990 எம்ஆர்பி கொண்ட இந்த இயர்போனை ரூ.15,289க்கு வாங்கலாம்.
  • ஜேபிஎல் நிறுவனத்தின் Live Beam 3 என்ற இயர்போனை 60 சதவிகிதம் தள்ளுபடி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ.24,999 எம்ஆர்பி கொண்ட இந்த இயர்போனை வெறும் ரூ.9,999க்கு வாங்கலாம்.
  • சாம்சங் கேல்க்ஸி பட்ஸ் 3 புரோ என்ற இயர்போன் 24 சதவிகிதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.25,699 என்ற விலையுள்ள இயர்போனை ரூ.18,999 என்ற விலைக்கு வாங்கலாம்.
  • அதே போல ஒன்பிளஸ் பட்ஸ் புரோ 3 என்ற இயர்போன் 25 சதவிகிதம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.13,999 என்ற விலையுள்ள இயர்போனை ரூ.10,547க்கு வாங்கலாம்.
  • மேலும் ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 என்ற இயர்போன் 7 சதவிகிதத்துடன் கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.12,900 கொண்ட இயர்போனை ரூ.11,999க்கு வாங்கலாம்.

இதையும் படிக்க: தொலைக்காட்சியை சுத்தம் செய்யும்போது செய்ய 5 கூடாத தவறுகள்!

இவை தவிர, மார்ஷல், ரெட்மி, மற்றும் போட் போன்ற பிராண்டுகளுக்கும் தள்ளுபடி வழங்குகின்றன.

 கேமிங் ஹெட்செட்களுக்கு மாஸ் ஆஃபர்கள்!

ரேஸர், ஜேபிஎல், லாகிடெக், காஸ்மிக் பைட் போன்ற பிராண்டுகளின் கேமிங் ஹெட்போன்களுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் தள்ளுபடி அளித்துள்ளது.  ரேஸர் பிராண்ட்டின் Kraken X Lite என்ற ஹெட்போனுக்கு அதிகபட்சமாக 71 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகின்றன. இதன்படி ரூ.9,179 எம்ஆர்பி கொண்ட இந்த ஹெட்போனை ரூ.2,699க்கு வாங்கலாம். காஸ்மிக் ஹெட்போனுக்கு 53 சதவிகிதம் தள்ளுபடி வழங்குகின்றன. இதன் மூலம் ரூ.6.999 விலையுள்ள இந்த ஹெட்போனை ரூ.3,299க்கு வாங்கலாம். ஜேபிஎல் குவாண்டம் 100 என்ற ஹெட்போனுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி அளித்துள்ளது. இதன் மூலம் ரூ. 3,999 கொண்ட இந்த ஹெட்போனை ரூ.1,999க்கு வாங்கலாம்.

இதையும் படிக்க: பிரைம் டே சேலை அறிவித்த அமேசான்.. இந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி!

கூடுதலான சலுகைகள்

ஐசிஐசிஆ மற்றும் எஸ்பிஐ கார்டுகளுக்கு 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது.

அமேசான் பே ஐசிஐசிஐ கார்டுக்கு 5 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகின்றன.

மேலும் சில பிராண்டுகளுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போன்ற வசதிகளும் உள்ளது.