Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜூலை 12-14 வரை நடைபெற உள்ள Amazon Prime Day Sale.. கொட்டி கிடக்கும் சலுகைகள்.. லிஸ்ட் இதோ!

Amazon Prime Day Sale 2025 | அமேசான் நிறுவனம் அவ்வப்போது அதிரடி சலுகைகளுடன் கூடிய தள்ளுபடிகளை அறிவிக்கும். அந்த வகையில், தற்போது அமேசான் பிரைம் டே சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் ஜூலை 12, 2025 முதல் ஜூலை 14, 2025 வரை நடைபெற உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜூலை 12-14 வரை நடைபெற உள்ள Amazon Prime Day Sale.. கொட்டி கிடக்கும் சலுகைகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Jul 2025 13:46 PM

உலக அளவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் அமேசான் (Amazon) நிறுவனம், தனது பிரைம் டே சேலை (Prime Day Sale) அறிவித்துள்ளது. அமேசான், ஒவ்வொரு ஆண்டும் இந்த சேலை அறிவிக்கும் நிலையில், இந்த ஆண்டும் அறிவித்துள்ளது. இந்த சேல் ஜூலை 12, 2025 முதல் ஜூலை 14, 2025 வரை என மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள் என பலவற்றுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிலையில், அமேசான் பிரைம் டே சேலில் என்ன என்ன சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே சேலை அறிவிக்கும் அமேசான்

உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது தான் அமேசான். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் தனது சேவைகளை வழங்கி வருகிறது. பில்லியன் கணக்கான பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள அமேசானை பயனபடுத்துகின்றனர். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படுவதால் பலருக்கும் இது மிகவும் விருப்பமான தேர்வாக உள்ளது.

இதையும் படிங்க : Budget Smartphones : ரூ.25,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

இவ்வாறு பில்லியன் கணக்கான மக்கள் அமேசானை பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிக்கும். அத்தகைய சலுகை விற்பபையில் ஒன்றுதான் அமேசான் பிரைம் டே சேல். இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மிக குறைந்த விலையிலும், அதிரடி தள்ளுபடியுடனும் விற்பனை செய்யப்படும்.

பிரைம் டே சேலின் சிறப்பு அம்சங்கள்

முக்கிய சலுகைகள்

  • அமேசான் பிரைம் டே சேலில் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கிகளின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும் நபர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
  • இந்த வங்கிகளின் கிரெடிட் காட்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மாத தவணை மூலம் பொருட்களை வழங்கும் நபர்களுக்கும் இது பொருந்தும்.

யுபிஐ சலுகைகள்

  • அமேசான் பிரைம் டே சேலில் இரண்டாவது முறை ரூ.1,000-க்கு மேல் வாங்கும் நபர்களுக்கு ரூ.100 கேஷ்பேக் வழங்கப்படும்.
  • Amazon Pay Later மூலம் ரூ.60,000 வரை Instant Credit மற்றும் ரூ.600 வரை Welcome Reward கிடைக்கும்.

அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு

  • அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பிரைம் டே சேலில் பொருட்களை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும்.
  • அதுமட்டுமன்றி 5 சதவீதம் கூடுதல் இன்ஸ்டன்ட் தள்ளுபடியும் கிடைக்கும்.