Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Budget Smartphones : ரூ.25,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Best Smartphones Under 25,000 Rupees | ஸ்மார்ட்போன்கள் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய செயலியாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில், ரூ.25,000-க்குள் அசத்தலான அம்சங்கள் உடன் கிடைக்கும் 3 சிறந்த ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Budget Smartphones : ரூ.25,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jun 2025 09:10 AM IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஸ்மார்ட்போன் இல்லை என்றால் பல வேலைகளை மிகவும் கடினப்பட்டு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உலகத்தோடு நாமும் வேகமாக இயங்க வேண்டும் என்றால் கட்டாயம் ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் விலையும் கூடிக்கொண்டே செல்வதால் சாமானிய மக்கள் சிலர் ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் சவால்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில், ரூ.25,000-க்குள் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அதிநவீன அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4

ஒன்பிளஸ் நோர்டு சிஇ4 (OnePlus Nord CE4) பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 Soc பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன், 5,500 mAh, 100 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நத்திங் போன் 3ஏ

நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3A) பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் Flexible AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 Soc பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன், 5,500 mAh, 500 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன்

மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் (Motorola Edge 60 Fusion) பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் 1.5K All Curved POLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன், 5,500 mAh, 68 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த 3 ஸ்மார்ட்போன்களும் அதிநவீன சிறப்பு அம்சங்களுடம் ரூ.25,000 என்ற பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படக்கூடிய அசத்தல் ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.