Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயர்போன் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை

Hearing Health : இப்பொதெல்லாம் இயர்போன் அல்லது இயர்பட்ஸின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது பாடல்கள் கேட்கும் அனுபவத்தை சிறப்பாக்குகிறது. ஆனால் இதன் பின்னால் இருக்கும் ஆபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக 85 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தம் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இயர்போன் அதிகம் பயன்படுத்துகிறீர்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 06 Jul 2025 23:51 PM

இயர்பட்ஸ் அல்லது இயர்போன்களைப் பயன்படுத்துபவர்கள் குறைந்த சத்தத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இயர்பட்களுக்குப் பதிலாக, ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது நல்லது. காதுக்கு மேல் பொருத்தப்படும் ஹெட்ஃபோன்கள், ஒலி நேரடியாக காதுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. எனவே இது குறைவான தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பயன்பாட்டிற்குப் பிறகு இயர்பட்களை தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில்,  காதுப் பகுதிய் தொற்றுகளையும் ஏற்படுத்தும்.

சமீபத்தில், ஒரு இன்ஸ்டாகிராம் பிரபல, இயர்பட்ஸால் தனது கேட்கும் திறனில் 45 சதவீதத்தை இழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானதால், இயர்பட்கள் உண்மையில் காது கேளாமையை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  அந்த வகையில் 85 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள சத்தம் காதுகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக சத்தங்களைக் கேட்பது காதுகளில் உள்ள செல்களை சேதப்படுத்தி, கேட்கும் திறனைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அளவு நடுத்தர அளவை விட அதிகமாக இல்லை என்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம். இதற்கு, நீங்கள் முன்கூட்டியே உங்கள் ஒலியளவை நடுத்தர நிலைக்கு சரிசெய்ய வேண்டும்.

நீண்டகாலம் இயர்போன்களை பயன்படுத்தினால் கேட்கு திறன் பாதிக்கும்

இயர்பட்கள் ஒலியின் தீவிரத்தை நேரடியாக செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் விழச் செய்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், அந்த தீவிரம் காதுகளின் உள் பகுதிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உரத்த சத்தங்கள் காலப்போக்கில் காதுக்குள் இருக்கும் செல்களை சேதப்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இயர்பட்கள் கேட்கும் திறனை பாதிக்கின்றன. இது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் நடக்காது. ஆனால் நீண்ட கால பயன்பாட்டினால் உங்கள் கேட்கும் திறனை இழக்கலாம். நீங்கள் அதிக ஒலியில் இயர்பட்களைப் பயன்படுத்தினால் கவனமாக இருங்கள். மணிக்கணக்கில் இயர்போன்களைப் பயன்படுத்துவது உங்கள் காதுகளை மட்டுமல்ல, இயர்போனையும் சேதப்படுத்தும்.

நீங்கள் கண்டிப்பாக இயர்பட்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நீண்ட நேரம் அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்து இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். இயர்பட்ஸ் அல்லது இயர்போன்களைப் பயன்படுத்துபவர்கள் குறைந்த சத்தத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இயர்பட்களுக்குப் பதிலாக, காதுக்கு மேல் பொருத்தப்படும் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது நல்லது. காதுக்கு மேல் பொருத்தப்படும் ஹெட்ஃபோன்கள், ஒலி நேரடியாக காதுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை. எனவே இது குறைவான தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பயன்பாட்டிற்குப் பிறகு இயர்பட்களை தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். இல்லையெனில், காதுப்பகுதியில் தொற்றுகளையும் ஏற்படுத்தும்.