Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Prime Day Sale : பிரைம் டே சேலை அறிவித்த அமேசான்.. இந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி!

Amazon Prime Day Sale 2025 | அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஏதேனும் சேல்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது பிரைம் டே சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என அமேசான் அறிவித்துள்ளது.

Prime Day Sale : பிரைம் டே சேலை அறிவித்த அமேசான்.. இந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு 40% வரை தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 27 Jun 2025 14:30 PM

அமேசான் (Amazon) நிறுவனம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகளை (Offers For Smartphones) வழங்கி வருகிறது. அவ்வபோது ஏதேனும் சேல்களை அறிவிக்கும் அமேசான் தற்போது பிரைம் டே சேலை (Amazon Prime Day Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் பல முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு சுமார் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அமேசான் கூறியுள்ளது. இந்த நிலையில், அமேசானின் இந்த பிரைம் டே சேல் எப்போது தொடங்க உள்ளது, எந்த எந்த மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரைம் டே சேலை அறிவித்த அமேசான்

அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஏதேனும் சேலை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்த சேல்களின் போது ஸ்மார்ட்போன்கள், மின்சாதன பொருட்கள் என அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரைம் டே சேலை அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 12, 2025 அன்று தொடங்கும் இந்த சேல், ஜூலை 14, 2025 வரை நடைபெற உள்ளது.

ஜூலை 12, 2025 முதல் ஜுலை 14, 2025 வரை – அமேசான் பிரைம் டே

மொத்தம் மூன்று நாட்கள் இந்த சேல் நடைபெற உள்ள நிலையில், அதனை தொடர்ந்து சுதந்திர தின சேலை (Independence Day Sale) அமேசான் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்த பிரைம் டே சேலில் அமேசான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளது. இதில் ஐபோன் 15, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை சலுகை வழங்கும் அமேசான்

பிரைம் டே சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலை குறைக்கப்படும் என்பது குறித்து அமேசான் எந்த தகவல்களையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், பிரைம் டே சேலில் எந்த எந்த ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, ஒன்பிளஸ் 13 எஸ், iQOO Neo 10, சாம்சங் கேலஸ்கி பட்ஸ் 3 ப்ரோ, ஐபோன் 15 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அமேசான் பிரைம் டே சேலில் அதிரடி சலுகைகள் வழங்கப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.