Amazon Great Freedom Festival : முன்னணி பிராண்டு இயர்போன்களுக்கு 75% வரை தள்ளுபடி.. உடனே செக் பண்ணுங்க!
Amazon Great Freedom Festival | அமேசான் நிறுவனம் அவ்வப்போது ஏதேனும் சேலை அறிவித்து அதில் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும். அந்த வகையில் தற்போது அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் சேலை அறிவித்துள்ளது. இதில் பல முன்னணி பிராண்டுகளின் இயர்போன்களுக்கு 75% வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் (Amazon Great Freedom Festival) இன்று (ஜுலை 31, 2025) முதல் தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் பல பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் இயர்போன்களுக்கு (Earphone) அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. நீங்கள் நீண்ட நாட்களாக நல்ல தரமான இயர்போன் வாங்க வேண்டும் என்று காத்திருந்தால் உங்களுக்கு இது மிக சிறந்த தேர்வாக இருக்கும். காரணம், அமேசானின் இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை பயன்படுத்தி முன்னணி பிராண்டுகளின் இயர்போன்களை மிக குறைந்த விலையில் வாங்கிக்கொள்ளலாம்.
அமேசான் கிரேட் ஃபிரீடம் ஃபெஸ்டிவல் விற்பனை
இந்தியாவின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமாக அமேசான், அவ்வப்போது பல விற்பனையை அறிவித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமேசானின் பிரைம் டே சேல் (Amazon Prime Day Sale) நடைபெற்ற நிலையில், தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் சாம்சங்க், ரியல்மி, ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் இயர்போன்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சிறந்த விலையில், இயர்போன்களை வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Amazon Prime Day 2025: பிரீமியம் இயர்போன்கள் மீது 78% வரை தள்ளுபடி! உங்க சாய்ஸ் எது?




எந்த எந்த இயர்போன்களுக்கு எவ்வளவு சலுகை
சாம்சங்க் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ – இந்த இயர்போன் 19,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.11,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
போட் நிர்வாணா இவி ப்ரோ – இந்த இயர்போன் 4,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 – இந்த இயர்போன் 2,799-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.1,699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ரியல்மி பட்ஸ் டி310 – இந்த இயர்போன் 3,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.1,699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மிவி டுயோபாட்ஸ் ஐ2 – இந்த இயர்போன் 2,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.699-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
ஆப்பில் ஏர்பாட்ஸ் 4 – இந்த இயர்போன் 12,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசான் சேலில் ரூ.11,499-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் சில அசத்தல் அம்சங்கள்
எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி இயர்போன்களை வாங்கினால் 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். No Cost EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் இதில் உள்ளது.