Flipkart Freedom Sale : பிளிக்பார்ட் ஃபிரீடம் சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Flipkart Freedom Sale | பிளிப்கார்ட் நிறுவனம் தனது ப்ரீடம் சேலை அறிவித்துள்ளது. இந்த சேல் ஆகஸ்ட் 01, 2025 அன்று தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 08, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த சேலில் பல முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய இ காமர்ஸ் (e Commerce) நிறுவனமாக உள்ளது பிளிப்கார்ட். இந்த இ காமர்ஸ் தளத்தை பயன்படுத்தி ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் தேவையான பொருட்களை வாங்கும் நிலையில், இந்த நிறுவனம் அவ்வப்போது பல சலுகைகள் மற்றும் விற்பனைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலை (Flipkart Freedom Sale) அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேலில் என்ன என்ன ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஃபிரீடம் சேலை அறிவித்த பிளிப்கார்ட் நிறுவனம்
ஆகஸ்ட் 15, 2025ப் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் ஃபிரீடம் சேலை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 01, 2025 தொடங்கிய இந்த சேல் ஆகஸ்ட் 08, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த 8 நாட்கள் சேலில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில், சிறந்த தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஐபோன் 16
தற்போதைய நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் மிக சிறந்த மாடலாக இந்த ஐபோன் 16 (iPhone 16) உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் வெறும் ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.




ஐபோன் 16இ
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஆப்பிள் ஐபோன் 16இ (iPhone 16e) ஸ்மார்ட்போன் ரூ.59,000-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் வெறும் ரூ.54,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Redmi Note 14 SE : பட்ஜெட் விலையில் அறிமுகமானது ரெட்மி நோட் 14 எஸ்இ.. சிறப்பு அம்சங்கள் என்ன?
நத்திங் 3ஏ
இந்த நத்திந்த் நிறுவனத்தின் நத்திங் 3ஏ (Nothing 3a) ஸ்மார்ட்போன் ரூ.28,149-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் வெறும் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங்க் எஸ்24எஃப்இ
சாம்சங்க் எஸ்24எஃப்இ (Samsung S24FE) ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் வெறும் ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : இந்தியாவின் அதிகம் பயன்படுத்தும் 8 முக்கிய அரசு செயலிகள் – இந்த லிஸ்ட்டில் உங்க ஆப் இருக்கா?
சாம்சங் எஸ்24
சாம்சங் எஸ்24 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஃபிரீடம் சேலில் வெறும் ரூ.46,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.