Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Oppo K13 Turbo : இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Oppo K13 Turbo Series Smartphones | ஓப்போ நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வரும் நிலையில் தற்போது ஒப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Oppo K13 Turbo : இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஓப்போ கே13 டர்போ சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Aug 2025 14:26 PM

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான ஓப்போ அவ்வப்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo K13 Turbo Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இதில் ஓப்போ கே 13 டர்போ (Oppo K13 Turbo) மற்றும் ஓப்போ கே 13 டர்போ ப்ரோ (Oppo K13 Turbo Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஓப்போ கே 13 டர்போ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

ஓப்போ கே 13 டர்போ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் அமோலிட் திரை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எஸ் 4 ஜென் பிராசசரை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனை பயன்படுத்தும்போது அதிக வெப்பமாவதை தடுக்கும் வகையில் டர்போ கூலிங் அமைப்பு இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்  பின்பக்கத்தில் 50 எம்பி முதன்மை கேமராவும், 2எம்பி ஐஓஎஸ் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல செல்ஃபிக்கு 16 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 7,000 mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனி  ஆரம் விலை ரூ.24,999 ஆக உள்ளது.

இதையும் படிங்க : Infinix GT 30 5G Plus : இந்தியாவில் அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஓப்போ கே 13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்

ஓப்போ கே 13 டர்போ ஸ்மார்ட்போனில் உள்ள பிராசசரை தவிர மற்ற அனைத்து அம்சங்களும் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 4கே வீடியோ பதிவு செய்யும் திறன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8450 பிராசசரை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.33,154-ல் இருந்து தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது.