Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Infinix GT 30 5G Plus : இந்தியாவில் அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Infinix GT 30 5G Plus Smartphone | இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Infinix GT 30 5G Plus : இந்தியாவில் அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
இன்ஃபினிக்ஸ் ஜிடி30
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Aug 2025 16:40 PM

ஹாங்காங்கை தலைமை இடமாக கொண்டுள்ள இன்ஃபினிக்ஸ் (Infinix) ஸ்மார்ட்போன் நிறுவனம் பட்ஜெட் விலையில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனை (Infinix GT30 5G Plus Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிள்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேமிங் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் அறிமுகமான ஜிடி 30 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன்

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த ஜிடி 30 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஒரு மிட் ரேஞ் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் மீது ஆர்வம் கொண்டவர்களை ஈர்க்கும் வகையில் பல சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. கேமிங்குக்கு சிறந்த ஸ்மார்ட்போன் ஆக இது வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மார்ட்போனின் வெப்பநிலையை பரிசோதனை செய்யும் வகையில் கூலிங் சிஸ்டம் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Vivo Y400 5G : இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. 68+8 மெகாபிக்சல் கொண்ட இரண்டு கேமராக்கள் பின்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 13 மெகாபிக்சல் கொண்ட முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Flipkart Freedom Sale 2025: ரெட்மி Note 14 Pro+ 5G மாடலுக்கு 17% தள்ளுபடி!

இதில் 5500 mAh பேட்டரி அம்சம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் , 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,499 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.