இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Poco M 7 Smartphone introduced in India | போக்கோ நிறுவனம் தனது மிட் ரேஞ் ஸ்மார்ட்போன் ஆன போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போக்கோ (Poco) நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போனை (Poco M 7 Plus Smartphone) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை இல்லாத சில அசத்தல் அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகமாகியுள்ள இந்த போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் அறிமுகமானது போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்
இந்த போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்போனில் 6.9 இன்ச் எச்டி திரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 6 எஸ் மூன்றாம் தலைமுறை பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. போக்கோ நிறுவனம் இதுவரை அறிமுகம் செய்த மிட் ரேஞ் ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் இந்த ஸ்மார்ட்போனில் 7,000 mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிக் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : Vivo V60 : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது விவோ வி60.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
🚀POCO M7 Plus is HERE!
6.9″ MEGA SCREEN 📱 + 144Hz HYPER SMOOTH⚡ = NEXT- LEVEL VISUALS 🤯13 AUG | Only on Flipkart pic.twitter.com/GuN2dgiGK9
— POCO India (@IndiaPOCO) August 11, 2025
இந்த போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் மொத்தம் மூன்று வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 8ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போக்கோ எம் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 8ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போக்கோ எம் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- 6ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போக்கோ எம் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Oppo K13 Turbo : இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ கே 13 டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
எப்போது முதல் விற்பனைக்கு வருகிறது
போக்கோ நிறுவனத்தின் இந்த புதிய போக்கோ எம் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் ஆகஸ்ட் 19, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன் இணைய விற்பனை தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும். நீலம், கருப்பு, சில்வர் உள்ளிட்ட மூன்று அட்டகாசமான நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.