Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Redmi Note 15 Series : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 15 சீரீஸ்!

Redmi Note 15 Series Launched | ஜியோமி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

Redmi Note 15 Series : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமானது ரெட்மி நோட் 15 சீரீஸ்!
ரெட்மி நோட் 15 சீரீஸ்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Aug 2025 14:27 PM

சீனாவை தலைமை இடமாக கொண்டுள்ள ஜியோமி (Xiaomi) நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Redmi Note 15 Series Smartphones) சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி நோட் 15 சீரீஸில் ரெட்மி நோட் 15 (Redmi Note 15) , ரெட்மி நோட் 15 ப்ரோ (Redmi Note 15 Pro) மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் (Redmi Note 15 Pro Plus)ஆகியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன.

ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் – சிறப்பு அம்சங்கள் என்ன?

குவால்கம் ஸ்நாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஆக இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா பிராசசர் அம்சத்துடன் ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்காளிலும் 6.83 இன்ச் OLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பட்ஜெட் விலையில், அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது லாவா பிளேஸ் AMOLED 2 5ஜி!

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 பிரைமரி சென்சார, 50 மேகாபிக்சல் 2.5எக்ஸ் டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிசல் அல்ட்ரா வைட் கேமராவை கொண்டுள்ளது. இதேபோல ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் சோனி LYT-600 பிரைமரி லென்ஸ், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் – விலை பட்டியல்

ரெட்மி நோட் 15

6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் 999 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.12,200 ஆகும். 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.13,400-க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.15,800-க்கும் அறிமுகமாகியுள்ளது. மேலும், 12ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.18,300-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இதுவரை இல்லாத வகையில் 7,000 mAh பேட்டரியுடன் அறிமுகமான போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

ரெட்மி நோட் 15 ப்ரோ

8ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் கொண்ட இந்த ரெட்மி நோட் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் 1,499 யுவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.18,300 ஆகும். 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.20,700-க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512 ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.23,200-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ்

12ஜிபி ரேம் மற்றும் 256 ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,400-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 12ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரூ.26,800-க்கும், 16ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.29,200-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 16ஜி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.30,500-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.