ஆண்ட்ராய்டு போன் மெதுவாக இயங்குகிறதா? இந்த 7 எளிய டிரிக்ஸை டிரை பண்ணுங்க
Boost Android Phone Speed : ஸ்மார்ட்போன்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் ஸ்மார்ட்போன் வாங்கிய சில மாதங்களில் அதன் வேகம் குறைய தொடங்குகிறது. பேட்டரி விரைவில் காலியாகிவிடுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய 7 வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் (Smartphone) நம் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாக மாறிவிட்டது. நம் தேவை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பல்வேறு வசதிகளுடன் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு சில மாதங்களில் மெதுவாக இயங்கத் தொடங்குவது, பேட்டரி விரைவில் காலியாகுவது போன்ற பிரச்னைகள் பெரும்பாலான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஏற்படும். இதற்காக சில மாதங்களிலேயே புதிய போன் வாங்கும் நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படுகின்றனர். புதிய போன் வாங்காமல், சில எளிய வழிகளை பின்பற்றி உங்கள் போனின் வேகத்தையும், பேட்டரி ஆயுளையும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டு போன்களின் வேகம் மற்றும் பேட்டரியை மேம்படுத்தும் 7 டிரிக்ஸ்
1.பேட்டரி செட்டிங்ஸை சரி செய்யுங்கள்
பேட்டரி விரைவில் காலியாவது, மொபைல் வேகத்தை பாதிக்கும். இதற்காக Auto Brightness-ஐ ஆஃப் செய்து, Screen Brightness 50 சதவிகிதத்துக்கும் குறைவாக வைத்துக்கொள்ளுஹ்கள். அதே சமயம் Adaptive Battery, Battery Optimisation போன்ற அம்சங்களை பயன்படுத்தினால், அதிக பவர் எடுத்துக்கொள்ளும் செயலிகளை கட்டுப்படுத்த முடியும்.
2. டார்க் மோட் பயன்படுத்துங்கள்
OLED ஸ்கிரீன் கொண்ட போன்களில் டார்க் மோட் பயன்படுத்தினால், பேட்டரி சேமிப்புடன் கண்ணுக்கு ஏற்படும் பாதிப்பும் குறையும். ஆண்ட்ராய்டு 10 மற்றும் அதற்கு பின் வந்த போன்களில் System wide dark mode உள்ளது. Settings பகுதியில் இந்த ஆப்சனை பயன்படுத்தலாம்.




3. சாஃப்ட்வேர் அப்டேட்களை சரிபார்க்கவும்
சாஃப்ட்வேர் அப்டேட்களை உடனுக்குடன் மேற்கொள்வதன் மூலம் பிரச்னைகள் செரி செய்யப்பட்டு போனின் வேகம் அதிகரிக்கும். இதனால் போனின் செயல்திறனை அதிகரிக்க போனை அடிக்கடி அப்டேட் செய்வது நல்லது. இதற்காக Settings – Software Updates சென்று Check for Updates என்பதை தேர்ந்தெடுத்து பார்க்கவும்.
இதையும் படிக்க : மெசேஜில் வரும் S,G,P,T – இந்த எழுத்துகளுக்கு அர்த்தம் தெரியுமா? மோசடிகளை தவிர்க்கலாம்
4. தேவையற்ற செயலிகளை நீக்கவும்
பல போன்களில் பயன்படுத்தப்படாத செயலிகள் நம் ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரியை பயன்படுத்துகின்றன. அவற்றை நீக்குவது மற்றும் disable செய்யலாம். Settings – Apps – Installed Apps சென்று தேவையற்ற ஆப்களை நீக்கலாம்.
5. பயன்படுத்தாத செயலிகளுக்கான அனுமதியை ரத்து செய்யுங்கள்
சில செயலிகள் பின்னணியில் இயங்குவதன் மூலம் பேட்டரி, மெமரியை பாதிக்கும். சில செயலிகளுக்கு இடம், பின்னணியில் செயல்பாடு போன்ற அனுமதி வழங்கியிருப்போம். அது நம் போனின் செயல்பாடுகளை அது பாதிக்கும். எனவே Settings – Privacy – Permission Manager சென்று மேற்கொள்ளலாம்.
6. போனை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்யுங்கள்
ரீஸ்டார்ட் செய்வதால் பின்னணியில் இயங்கும் செயலிகள் நிறுத்தப்பட்டு மெமரி ஃப்ரீயாகும். சாம்சங், ஒன்பிளஸ், ஓப்போ போன்ற போன்களில் ஆட்டோ ரீஸ்டார்ட் வசதி உண்டு.
இதையும் படிக்க : மாதவிடாய் கண்காணிப்பு செயலிகளை பயன்படுத்துவது ஆபத்து.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!
7. Factory Reset செய்யுங்கள்
மேற்சொன்ன அனைத்தும் பயனளிக்கவில்லை என்றால் Factory Reset செய்யலாம். இது போனின் சாஃப்ட்வேரை ஆரம்பநிலைக்கு மாற்றும். இதனால் போன் புதிது போல இயங்கும். இதற்கு Settings – System – Reset Options – Erase all data / Factory Reset என்று செய்யலாம். ரீசெட் செய்வதற்கு முன் டேட்டாவை கூகுள் டிரைவ் மூலம் சேமித்து வையுங்கள்