50 சதவிகிதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றலாம்… சர்வீஸ் செய்யலாம் – ஜியோமி அதிரடி அறிவிப்பு
Xiaomi Service Week : இந்தியாவின் ஜியோமி நிறுவனம் பேட்டரி சர்வீஸ் செய்யவும் மற்றும் புதிதாக பேட்டரி மாற்றவும் 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன் மூலம் 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த முகாமில் பழைய போன்களுக்கான பேட்டரி மாற்றிக்கொள்ள முடியும்.

இந்தியாவின் மிக குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் ஸ்மார்ட்போன் விற்பனை செய்து வருகிறது ஜியோமி நிறுவனம். இந்த நிறுவனத்தின் ரெட்மி (Redmi) மற்றும் போக்கோ நிறுவனங்கள் நடுத்தர மற்றும் எளிய மக்களின் மொபைல் போன்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான உயர் ரக போன்களில் உள்ள கேமரா போன்ற வசதிகள் தங்கள் போன்களில் வழங்கி வருகிறது. இதனால் பெரும்பாலான மக்களின் சாய்ஸாக ஜியோ இருந்து வருகிறது. மேலும் டிவி ஸ்மார்ட் டிவி போன்ற பிற சேவைகளையும் ஜியோமி வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஜியோமி நிறுவனம் கேர் அண்ட் கனெக்ட் சர்வீஸ் வொர்க் என்ற பெயரில் புதிய தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாதி விலையில் பேட்டரி சர்வீஸ்
ஜியோமி நிறுவனம் தங்களது ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை சர்வீஸ் செய்வதற்கு மற்றும் புதிதாக மாற்றுவதற்கு 50 சதவிகிதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. இதன் மூலம் பழைய ரெட்மி போன்களில் பேட்டரி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இந்த வாய்ப்பை பயனப்டுத்தி கொள்ளலாம். இதனால் பழைய போனை மாற்றாமலேயே, பேட்டரியை மட்டுமே மாற்றி பயன்படுத்தலாம். இந்த சேவையை ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 30, 2025 வரை 5 நாட்கள் இந்த சேவையை மட்டுமே பயன்படுத்தலாம். பழைய மாடல்கள் வைத்திருப்பவர்கள், அடிக்கடி பேட்டரி சார்ஜ் காலியாகும் பிரச்னையால் அவதிப்படுவபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.




இதையும் படிக்க : ஸ்மார்ட்போன் சார்ஜ் வேகமாக காலியாகுதா? இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க!
ஜியோமியின் அறிவிப்பு பதிவு
Battery worries ? Not Anymore.
Get up to 50% Off on Battery Replacement this Care & Connect Service Week, along with:
✅ Free Software Upgrade
✅ Free Device Health Check-Up
✅ Free Cleaning & Sanitization#XiaomiCare pic.twitter.com/SNsHVXyQjQ— Xiaomi India (@XiaomiIndia) August 25, 2025
இதையும் படிக்க : விமானத்தில் பயணம் செய்யும்போது Flight Mode போடவில்லை என்றால் என்ன ஆகும்?
இலவச சேவைகள்
பேட்டரி சலுகை போக ஜியோமி சில இலவச சேவைகளையும் வழங்குகிறது. அதன் ஒரு பகுதியாக இலவச சாஃப்ட்வேர் அப்டேட் செய்யலாம். புதிய MIUI அல்லது HyperOS வெர்ஷனுக்கு அப்டேட் செய்யலாம். போனின் ஹார்ட்வேர் செயல்பாடுகள் மற்றும் செயல்திறனை பரிசோதனை செய்யலாம் போன்ற சேவைகளை இலவசமாக வழங்குகிறது. இது அனைத்தையும் ஜியோமி சர்வீஸ் சென்டர் மூலம் மேற்கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
- பழைய ஜியோமி ரெட்மி போன்களின் பேட்டரி பிரச்னைகள் குறைந்த விலையில் சரி செய்து கொள்ள முடியும்.
- இலவசமாக சாஃப்ட்வேர் அப்டேட் செய்யலாம். இதன் மூலம் நமது பழைய போன்களின் செயல்திறன் மேம்படும்.
- இலவச பரிசோதனையால் நம் போனின் நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
- இது அனைத்தும் அதிகாரப்பூர்வ சேவை மையத்தில் செய்யப்படும் என்பதால் பாதுகாப்பு குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்காது.