மெசேஜில் வரும் S,G,P,T – இந்த எழுத்துகளுக்கு அர்த்தம் தெரியுமா? மோசடிகளை தவிர்க்கலாம்
SMS Codes Explained: சமீப காலமாக இமெயில் மற்றும் எஸ்எம்எஸ்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இதனை தவிர்க்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு எஸ்எம்எஸ்களில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இமெயில் (E-Mail) மற்றும் மொபைல் எஸ்எம்எஸ் (SMS) வாயிலாக நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. பலர் தனிப்பட்ட விவரங்களை திருடும் நோக்கில் போலியான எஸ்எம்எஸ்களை அனுப்பி ஏமாற்ற முயல்கின்றனர். அதில் ஒரிஜினல் எது? போலியானவை எது ? என தெரியாததால் மோசடியில் சிக்க வேண்டிய சூழலை சந்திக்கிறோம். இது போன்ற சூழ்நிலைகளில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மோசடிகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மோசடி மெசேஜ்களை எப்படி அடையாளம் காண்பது?
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், ஆன்லைன் நிறுவனங்கள் ஆகியவை மெசேஜ் அனுப்ப தனி ஐடி முறையைப் பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி ஒரு மெசேஜ் அனுப்புநர் ஐடி வடிவத்தை பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. உதாரணமாக எச்டிஎஃப்சி வங்கியில் இருந்து உங்களுக்கு மெசேஜ் வருகிறது என வைத்துக்கொண்டால், HDFCBK-S என உங்களுக்கு மெசேஜ் வரும். அதாவது பெயருடன் S என்ற எழுத்து சேர்ந்து வரும். அதனை வைத்து இது அதிகாரப்பூர்வ வங்கியில் இருந்து வரும் மெசேஜ் என தெரிந்துகொள்ள முடியும்.
இதையும் படிக்க : டிஜிட்டல் கைது என கூறி மூதாட்டியிடம் ரூ.7.70 கோடி பணம் பறித்த கும்பல்.. ஷாக் சம்பவம்!




மெசேஜ்களுடன் வரும் எழுத்துக்களுக்கான விளக்கம்
- நமக்கு வரும் மெசேஜ்களில் கூடுதலாக S என்ற எழுத்து வந்தால், அது சேவை நிறுவனங்களில் இருந்து வரும் மெசேஜ் என்று அர்த்தம். S என்றால் Service என்று அர்த்தம். உதாரணமாக வங்கியில் இருந்து பணப்பரிவர்த்தனை தகவல்கள் , ஓடிபி போன்றவை பெயரில் S என்ற எழுத்து சேர்ந்து வரும்.
- நம் மெசேஜ்களில் G என்ற எழுத்து சேர்ந்து வந்தால் அது அரசு அனுப்பும் தகவல்கள் என்று அர்த்தம். G என்றால் Government என்று பொருள்படும். உதாரணமாக அரசு திட்டங்கள் குறித்த தகவல்கள், பொது அறிவிப்புகள், அதிகாரப்பூர்வ செய்திகள் G என்ற எழுத்துடன் வரும்.
- நமக்கு வரும் மெசேஜ்களில் P என்ற எழுத்து சேர்ந்து வந்தால் அது விளம்பரம் அல்லது புரமோஷன் குறித்த செய்திகள் என்று அர்த்தம். நிறுவனங்கள் அனுப்பும் தள்ளுபடிகள் போன்ற மெசேஜ்கள் P என்ற எழுத்துடன் வரும்.
- நமக்கு வரும் மெசேஜ்களில் T என்ற எழுத்து சேர்ந்து வந்தால் அது ஓடிபி மற்றும் அவசர கால தகவல்கள் என மெசேஜ்.
இதையும் படிக்க : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!
இதன் மூலம் நமக்கு வரும் மெசஜ்களில் உள்ள எழுத்துகள் என்ன என்பதை வைத்து, அது உண்மையான மெசேஜா அல்லது மோசடி மெசேஜா என தெரிந்துகொள்ளலாம்.