Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gmail : ஸ்டோரேஜ் சிக்கலை சரிசெய்ய ஜிமெயிலில் வந்தாச்சு Manage Subscriptions அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?

Gmail Storage Clearing Feature | கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் செயலியை உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் அசத்தல் அம்சம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gmail : ஸ்டோரேஜ் சிக்கலை சரிசெய்ய ஜிமெயிலில் வந்தாச்சு Manage Subscriptions அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Sep 2025 15:59 PM IST

பெரும்பாலான பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முக்கிய செயலியாக ஜிமெயில் (Gmail) உள்ளது. இத்தகைய முக்கிய செயலிகாக ஜிமெயில் இருந்தாலும், அதில் பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சிக்கல்களில் ஒன்றுதான் ஸ்டோரேஜ். தினம்தோறும் ஜிமெயிலுக்கு வரும் மின்னஞ்சல்களால் ஜிமெயில் ஸ்டோரேஜ் மிக வேகமாக நிரம்பிடும். இந்த சிக்கலை எதிர்கொள்ள தான் கூகுள் Manage Subscriptions என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் சிறப்புகள் என்ன, அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய Manage Subscriptions அம்சத்தை அறிமுகம் செய்துள்ள கூகுள் 

உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் கூகுள் நிறுவனத்தின் இந்த ஜிமெயில் செயலியை பயன்படுத்துகின்றனர். அன்றாட தகவல் பரிமாற்றம், ஆவண பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இது சிறந்த செயலியாக உள்ளது. என்னதான் ஜிமெயில் செயலியில் பல அசத்தல் அம்சங்கள் இருந்தாலும் அதில் மிகப்பெரிய சிக்கலாக உள்ள ஸ்டோரேஜ். காரணம், அனைத்து Subscription குறுஞ்செய்திகளும் ஜிமெயிலில் வந்து விழுந்துவிடும்.

இதையும் படிங்க : உங்கள் கூகுள் அக்கவுண்டை வேறு யாரும் பயன்படுத்துகிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

உதாரணமாக ஏதேனும் செயலியை பயன்படுத்தினால் அதன் நோடிஃபிகேஷன்கள் (Notifications), ஏதேனும் கடையில் பொருட்களை வாங்கினால் அது தொடர்பான நோடிஃபிகேஷன்கள் என நாள்தோறு நூற்றுக்கணக்கான மெயில்கள் வரும். இதுவே ஸ்டோரேஜ் சிக்கலை உருவாக்கும் முக்கிய காரணியாக உள்ளது. இந்த நிலையில் தான், கூகுள் நிறுவன ஜிமெயிலில் புதிய Manage Subscriptions அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜிமெயிலில் Manage Subscriptions-ஐ பயன்படுத்துவது எப்படி?

  1. அதற்கு முதலில் ஜிமெயில் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. அங்கு இடது பக்கம் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதனை கிளிக் செய்ததும் சில ஆப்ஷன்கள் தோன்றும்.
  4. அந்த ஆப்ஷன்களில் Manage Subscriptions என்ற ஆப்ஷன் இருக்கும்.
  5. அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் நீங்கள் எவற்றையெல்லாம் சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ளீர்கள் என்ற பட்டியல் தோன்றும்.
  6. அந்த பட்டியலில் உங்களுக்கு எது தேவையில்லை என்று தோன்றுகிறதோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  7. அவ்வாறு கிளிக் செய்யும்போது Unsubscribe மற்றும் கேன்சல் என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும்.
  8. அதில் Unsubscribe என்பதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வரும் தேவையற்ற குறுஞ்செய்திகள் நிறுத்தப்படும்.

இதையும் படிங்க : ஜிமெயிலின் இந்த 5 சீக்ரெட்ஸ் பற்றி தெரியுமா? உங்கள் வேலை சில நிமிடங்களில் முடியும்

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி உங்களது ஸ்டோரேஜ் சிக்கலுக்கு நீங்கள் தீர்வு காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.