இனி ஹிந்தி, தெலுங்கு வீடியோக்களை நேரடியாக தமிழில் பார்க்கலாம் – யூடியூபில் வந்தாச்சு புதிய வசதி
Youtube Language Update : முன்பு யூடியூபில் வீடியோவை ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக அப்லோடு செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையில் இந்த பிரச்னையை போக்க, மல்டி லாங்குவேஜ் ஆடியோ டிராக் எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஆங்கில வீடியோவை தமிழில் பார்க்க முடியும்.

உலகம் முழுவதும் உள்ள யூடியூப் கிரியேட்டர்களுக்கு பெரிய பரிசாக யூடியூப் (Youtube) தனது புதிய மல்டி லாங்குவேஜ் ஆடியோ டிராக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஆங்கிலத்தில் உருவாக்கப்படும ஒரு வீடியோவை நம் விருப்பத்துக்கு ஏற்ப நம் தாய் மொழியில் பார்க்க முடியும். அதாவது வீடியோ உருவாக்கும்போதே அதனை அனைத்து மொழிகளுக்கும் ஆடியோ சேர்க்க முடியும். முன்னதாக ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக டப் செய்து அப்லோடு செய்ய வேண்டியிருந்தது. தற்போது அந்த தொல்லை இல்லை. பார்வையாளர்களே தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்து பார்க்க முடியும். இது டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த வசதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
மல்டி லாங்குவேஜ் ஆடியோ என்றால் என்ன?
மல்டி லாங்குவேஜ் ஆடியோ வசதியின் மூலம் கிரியேட்டர்கள் தங்கள் வீடியோவிற்கு கூடுதலாக பல மொழிகளில் ஆடியோ டிராக் சேர்க்கலாம். இது ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பம் அல்ல. கிரியேட்டர்களே தாமாக ஒவ்வொரு மொழிக்கும் டப்பிங் செய்து அதை அப்லோடு செய்ய வேண்டும். யூடியூப் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வசதியை சோதனை செய்து வந்தது. மேலும் சோதனை முறையில் மிஸ்டர் பீஸ்ட் ஜேமி ஓலிவர் மார்க் ராபர் போன்ற முன்னணி கிரியேட்டர்கள் இதைப் பயன்படுத்தினர். குறிப்பாக ஜேமி ஒலிவர் இந்த வசதி மூலம் தனது பார்வையாளர்களை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!




இந்திய கிரியேட்டர்களுக்கு இந்த வசதி ஏன் முக்கியம்?
யூடியூபின் மிகப்பெரிய பயனர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தெலுங்கு, பெங்காலி என பல்வேறு மொழிகள் கொண்ட நாடு இந்தியா. தமிழில் உருவாக்கப்படும் ஒரு வீடியோவை தமிழ் ரசிகர்கள் மட்டுமே பார்க்க முடியும். அல்லது ஆங்கில சப் டைட்டில் மூலம் இந்த வீடியோவை பார்க்கலாம். இந்த நிலையில் ஒரே வீடியோவில் பல்வேறு மொழி ஆடியோக்களை சேர்த்தால், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி ரசிகர்களும் நம் ஆடியோக்களை பார்க்க முடியும்.
உதாரணமாக பான் இந்திய படங்களின் டிரெய்லர் வெளியாகும்போது ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக டிரெய்லர் வெளியாகும். இனி ஒரே டிரெய்லருடன் ஆடியோ மட்டும் அப்லோடு செய்தால் போதும் அனைவராலும் பார்க்க முடியும். வியூஸ் அதிகரிக்கும். இதனால் பயனர்களுக்கு வருமானமும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தியா, யூடியூப்பின் மிகப்பெரிய பார்வையாளர் அடிப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் போன்ற பல பிராந்திய மொழிகளில் மக்கள் உள்ளடக்கங்களை ரசிக்கிறார்கள். இப்போது ஒரே வீடியோவிற்குள் பல மொழி ஆடியோ சேர்த்தால், கிரியேட்டர்கள் பல்வேறு மொழி பேசும் பார்வையாளர்களை எளிதில் சென்றடைய முடியும்.
இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?
- நீங்கள் ஒரு வீடியோவை கிளிக் செய்து கீழே உள்ள Settings அம்சத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் அதில் Audio Track என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில் காணப்படும் மொழிகளில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியிலேயே அந்த வீடியோவை பார்க்க முடியும்.
இதையும் படிக்க : யூடியூபில் குழந்தைகளைக் கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம் – எப்படி செயல்படும்?
கிரியேட்டர்கள் எப்படி சேர்க்க வேண்டும்?
- Youtube Studioக்கு செல்லவும்.
- Subtitle Editor என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்களுக்கு விருப்பமான ஆடியோவை அப்லோடு செய்யவும்.
- பின்னர் Save கொடுக்கவும்.
ஏற்கனவே அப்லோடு செய்யப்பட்ட வீடியோக்களுக்கும் இந்த வசதியைச் சேர்க்க முடியும். இதனால் பழைய வீடியோக்களையும் புதிய பார்வையாளர்கள் பார்க்க முடியும்.