10 நிமிடங்களில் Blinkit-ல் டெலிவரி செய்யப்படும் ஐபோன் 17.. அதுவும் அசத்தல் சலுகைகளுடன்!
Blinkit Delivers Apple iPhone 17 in Just 10 Minutes | ஆப்பிள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆப்பிள் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் இன்று (செப்டம்பர் 19, 2025) முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போனகளை (iPhone 17 Series Smartphones) அறிமுகம் செய்த நிலையில், அந்த ஸ்மார்ட்போன்கள் இன்று (செப்டம்பர் 19, 2025) முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “Awe Dropping” நிகழ்ச்சியில் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா சீரிஸ் 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 , ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இவை அனைத்தும் விற்பனைக்கு வந்துள்ளன.
10 நிமிடங்களில் ஐபோன்களை வீட்டிற்கு டெலிவரி செய்யும் பிளிங்கிட்
ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் நபர்கள் அவற்றை ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆப்பிள் ஸ்டோர் செயலி மற்றும் பிற இ காமர்ஸ் இணையதளங்கள் மூலமாகவும் வாங்கிக்கொள்ள முடியும். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடைகளிலும் வாங்கிக்கொள்ளலாம். இதுதவிட சில அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக வெறும் 10 நிமிடங்களில் பிளிங்கிட் மூலம் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 56% தள்ளுபடி.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் கொட்டிக்கிடக்கும் சலுகைகள்!




EMI மற்றும் வங்கி சலுகைகள்
பிளிங்கிட் நிறுவனம் ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் நிலையில், அசத்தல் சலுகைகளையும் வழங்குகிறது. அதாவது ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஆகிசிஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான பணத்தை செலுத்தினால் ரூ.6,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதேபோல ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி மாத தவணை முறையில் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கு பட்சத்தில் உங்களுக்கு 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை வழங்கப்படும். பிளிங்கிட் நிறுவனம் மட்டுமன்றி, பிக் பாஸ்கெட் (Big Basket), செப்டோ (Zepto) ஆகிய விரைவு டெலிவரி செயலிகளிலும் இதேபோன்ற பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க : ஃபிளிப்கார்டில் ஐபோன் 16ஐ 50,000க்குள் வாங்கலாம்! எப்படி தெரியுமா?
விலை பட்டியல்
256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.82,900 ஆக உள்ளது. இதேபோல, 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,02,900 ஆக உள்ளது. 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.1,74,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,49,900-க்கும், 2 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.2,29,900-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.