Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

iPhone 16 Pro : இதவிட குறைந்த விலையில் வாங்கவே முடியாது.. ரூ.1.1 லட்சத்துக்கான ஐபோன் 16 ப்ரோவை வெறும் ரூ.69,000-க்கு தரும் பிளிப்கார்ட்!

Flipkart Big Billion Days Sale | பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.42 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

iPhone 16 Pro : இதவிட குறைந்த விலையில் வாங்கவே முடியாது.. ரூ.1.1 லட்சத்துக்கான ஐபோன் 16 ப்ரோவை வெறும் ரூ.69,000-க்கு தரும் பிளிப்கார்ட்!
ஐபோன் 16 ப்ரோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Sep 2025 12:58 PM IST

ஆப்பிள் நிறுவனம் தனது லேட்டஸ் மாடல் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் ஐபோன் 17 சீரிசை (Apple iPhone 17 Series Smartphones) அறிமுகம் செய்துள்ளது. இதன் காரணமாக இதற்கு முந்தைய சீரிசான ஆப்பிள் ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களின் (Apple iPhone 16 Series Smartphones) விலை அதிரடியாக குறைந்துள்ளன. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன்களின் விலை குறைந்துள்ள நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலில் (Flipkart Big Billion Days Sale) இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்குகிறது. இதன் மூலம் ரூ.1.1 லட்சம் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களை வெறும் ரூ.69,999-க்கு வாங்கிக்கொள்ள முடியும். இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் 16 ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெறும் ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் 16 ப்ரோ

ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய சீரிசில் மிகவும் அதிக மதிப்பு கொண்ட ஸ்மார்ட்போன் ஆக இந்த ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இருந்தன. அதாவது இந்த ஸ்மார்ட்போன் தற்போது இ காமர்ஸ் இணையதளங்களில் ரூ.1,12,900-விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.69,999-க்கு விற்பனை செய்ய உள்ளது. அதாவது சுமார் ரூ.42,901 வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 இன்னும் தொடங்காத நிலையில், அந்த சேலில் இத்தகைய அதிரடி சலுகையுடன் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ விற்பனை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் ஏர் முதல் ஏர்பாட்ஸ் புரோ 3 வரை… ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறப்பான விஷயங்கள் – அப்படி என்ன ஸ்பெஷல்?

ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி தள்ளுபடி

இந்த ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,12,900-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.42,901 வரை தள்ளுபடி கிடைப்பது மட்டுமன்றி, வங்கி சலுகைகள், எக்ஸ்சேஞ் ஆகிய சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இதேபோல ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,44,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.89,900-க்கு பிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : iPhone 17 Air : மெல்லிய தோற்றம்.. அட்டகாசமான அம்சங்கள்.. முற்றிலும் புதுமையான ஐபோன் 17 ஏர் அறிமுகம்!

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் எப்போது?

பிளிப்கார்ட் நிறுவனம் தனது பிக் பில்லியன் டேஸ் சேலை செப்டம்பர் 23, 2025 முதல் தொடங்க உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.