OTT : வெறும் ரூ.100 மட்டும் தான்.. இவ்வளவு குறைந்த விலையில் ஓடிடி பிளான்களா? அட இது தெரியாம போச்சே!
Best Budget OTT Plans | தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் ஓடிடி தளங்களை பயன்படுத்தி திரைப்படங்கள், சீரீஸ், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பார்க்கின்றனர். இந்த நிலையில், ஓடிடி பிளான்களின் விலை அதிகமாக இருக்கும் என நினைத்து சிலர் அவற்றை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால், ரூ.100-க்கே ஓடிடி திட்டங்கள் கிடைக்கிறது.

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதை போலவே பலரும் ஓடிடி தளங்கள் மூலம் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்க விரும்புகின்றனர். பலரும் திரையரங்குகளுக்கு செல்வதை விடவும் ஓடிடி தளங்களில் திரைப்படம் பார்ப்பதையே விரும்புகின்றனர். செலவு குறைவு, பிடித்த திரைப்படத்தை பிடித்த நேரத்தில் பார்க்கலாம் என்பது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் ஓடிடி தளங்கள் பிரபலமாக உள்ள நிலையில், சிலர் ஓடிடி தளங்களின் விலை அதிகமாக இருக்கும் என நினைத்து பயன்படுத்தாமல் உள்ளனர். அத்தகைய நபர்களுக்காக ஒரு அசத்தல் மற்றும் பட்ஜெட் ஓடிடி பிளான்கள் குறித்து பார்க்கலாம்.
பட்ஜெல் விலையில் கிடைக்கும் ஓடிடி பிளான்
திரைப்படங்கள் மற்றும் சீரீஸ்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம் என பலரும் நினைப்பார்கள். ஆனால், பெரும்பாலான ஓடிடி பிளான்கள் அதிக விலை கொண்டு இருப்பதால் பலரும் அதனை தவிர்த்து விடுகின்றனர். இந்த நிலையில், ரூ.100 என்ற பட்ஜெட் விலை ஹாட்ஸ்டார் ஓடிடி பிளானை அறிமுகம் செய்துள்ளது. இது மிக குறைந்த விலையில் கிடைக்கும் அட்டகாசமான ஓடிடி பிளானாக உள்ளது. காரணம், இந்த ஓடிடி பிளானில் ஓடிடி மட்டுமன்றி டேட்டா வசதியும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இது ஒரு சிறந்த ஓடிடி பிளானாக இருக்கும்.
இதையும் படிங்க : Flipkart Black : இலவச யூடியூப் பிரீமியம் முதல் கேஷ்பேக் வரை.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது பிளிப்கார்ட் பிளாக்!




ரூ.100-க்கான ஏர்டெல் ஓடிடி பிளான்
ஏர்டெல் வழங்கும் ரூ.100-க்கான இந்த ஓடிடி பிளானுக்கு 30 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சலுகை மட்டுமன்றி, 5ஜி அதிவேக டேட்டாவும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் போன்கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதி கிடையாது. இது முற்றிலும் டேட்டா மற்றும் ஓடிடி-க்கான திட்டம் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரூ.100-க்கான ஜியோ ஓடிடி பிளான்
மிக குறைவான விலையில் கிடைக்கும் அசத்தல் ஓடிடி திட்டமாக இது உள்ளது. காரணம், வெறும் ரூ.100-க்கு கிடைக்கும் இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி 90 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் தொலைக்காட்சி எதில் வேண்டுமானாலும் நீங்கள் ஹாட்ஸ்டார் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஏர்டெல் முதல் ஜியோ வரை.. ஓடிடி உடன் கிடைக்கும் அசத்தல் ரீச்சார்ஜ் திட்டங்கள்.. லிஸ்ட் இதோ!
ரூ.151-க்கான விஐ-ன் ஓடிடி பிளான்
மற்ற இரண்டு திட்டங்களை விடவும் இது சற்று விலை அதிகமான திட்டமாக உள்ளது. ஆனால், இந்த திட்டமும் நல்ல சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி 90 நாட்களுக்கு நீங்கள் ஹாட்ஸ்டார் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டாவும் இணைந்து வழங்கப்படுகிறது.