Idli Kadai Movie : தனுஷின் இட்லி கடை படத்தில் ‘சிவநேசனாக ராஜ்கிரண்’.. வெளியான போஸ்டர் இதோ!
Rajkirans Idli Kadai Movie :தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம்தான் இட்லி கடை. இப்படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், தற்போது ராஜ்கிரணின் கதாபாத்திர போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் (Dhanush) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்களை அடுத்து, 4வது உருவாகியுள்ள படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயாகனாக நடித்துள்ளார். இந்த படமானது தனுஷின் 52வது திரைப்படமாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதை தொடர்ந்து மீண்டும் இட்லி கடை படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் (Rajkiran) மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தற்போது இட்லி கடை படத்திலிருந்து, ராஜ்கிரணின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. இவர் இப்படத்தில் “சிவநேசன்” (SIVANESAN ) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியான இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி.. ‘சக்தி திருமகன்’ பட ட்ரெய்லர் இதோ!
இட்லி கடை படக்குழு வெளியிட்ட ராஜ்கிரணின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் :
The thespian #Rajkiran plays SIVANESAN in #IdliKadai
Get ready for the film in theatres on the 1st of October 🕺🥁#IdlikadaiCharacterIntroduction@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @aakashbaskaran @thesreyas @wunderbarfilms @saregamasouth… pic.twitter.com/2jehblw0rB
— DawnPictures (@DawnPicturesOff) September 8, 2025
நடிகர் ராஜ்கிரண் ஏற்கனவே, தனுஷின் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இரண்டாவது முறையாக, இந்த இட்லி கடை படத்தில் நடித்துள்ளார். இதில் ராஜ்கிரண் “சிவநேசன்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இவர் வயதான தனுஷின் வேடத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷின் கிட்டத்தட்ட 2 வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அப்போதுதான் அது அமரன் கையாக மாறும்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!
இட்லி கடை நடிகர்களின் கதாபாத்திரம்
இந்த இட்லி கடை படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் என இரு நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் “என்ன சுகம்” மற்றும் “எஞ்சாமி தந்தானே” என இரு பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய் , சத்யராஜ், ஆர். பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் அருண் விஜய் அஸ்வின் என்ற கேரக்டரிலும், சத்யராஜ் விஷ்ணு வரதன் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.