Shakthi Thirumagan : அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி.. ‘சக்தி திருமகன்’ பட ட்ரெய்லர் இதோ!
Shakthi Thirumagan Movie Trailer :கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி. இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள 25வது படம்தான் சக்தித் திருமகன். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை தற்போது விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி (Vijay Antony) நடிகராக மட்டுமில்லாமல், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் மார்கன் (Maargan). இந்த படமானது அதிரடி திரில்லர் மற்றும் குற்றம் சார்ந்த கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்து விஜய் ஆண்டனியின் நடிப்பில், அதிரடி அரசியல் கதைக்களத்தில் உருவாகியிருக்கும் படம்தான் சக்தித் திருமகன் (Shakthi Thirumagan). இந்த படத்தை இயக்குநர் அருண் பிரபு (Arun Prabhu) இயக்கியுள்ளார். இவர் கடந்த 2017ம் ஆண்டு வெளியான அருவி என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, வாழ் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் சக்தித் திருமகன்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் முற்றிலும் அரசியல் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இந்த சக்தித் திருமகன் உருவாகியுள்ளது. இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 19ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க : பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்
விஜய் ஆண்டனி வெளியிட்ட சக்தித் திருமகன் பட ட்ரெய்லர் பதிவு :
#ShakthiThirumagan trailer out now 🔱
🔗 https://t.co/pP2xYYg4zR#ShakthiThirumaganFromSept19
11 days to go pic.twitter.com/dzgKlkdHoP— vijayantony (@vijayantony) September 8, 2025
இந்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அறிமுக நடிகை திருப்தி ரவீந்திரா நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து மற்றும் இசையும் அமைத்துள்ளார். கிட்டத்தட்ட இந்த சக்தித் திருமகன் படத்தை நடித்து, தயாரித்து மற்றும் இசையமைத்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கவினின் கிஸ் பட டிரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு
இந்த சக்தித் திருமகன் படமானது கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் சக்தித் திருமகன் என்று அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தெலுங்கில் பராசக்தி என அறிவிக்கப்பட்டிருந்தது. பின் சிவகார்த்திகேயனின் பராசக்தி படக்குழு விஜய் ஆன்டனியிடம் பேசி, தற்போது சக்தித் திருமகன் படத்தின் தெலுங்கு டைட்டில் “பத்ரகாளி” என மாற்றப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படங்கள்
நடிகர் விஜய் ஆண்டனி, தொடர்நது படங்களில் நடித்து வருகிறார். தனது நடிப்பில் மற்றும் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சக்தி திருமகன் படத்தை தொடர்ந்து, லாயர் என்ற படமானது உருவாகி வருகிறது. மேலும் இவரின் நடிப்பில் காக்கி, வள்ளி மயில் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.