Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : அப்போதுதான் அது அமரன் கையாக மாறும்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!

Kamal Haasan Praises Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருபவர் கமல் ஹாசன். சைமா விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த உழைப்பு குறித்து புகழ்ந்து பேசியிருந்தார்.

Kamal Haasan : அப்போதுதான் அது அமரன் கையாக மாறும்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த கமல்ஹாசன்!
கமல்ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Sep 2025 16:03 PM IST

நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தின் கதையை கமல் எழுத, இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த தக் லைஃப் படமானது கடந்த 2025, ஜூன் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் கமல்ஹாசனுடன் சிலம்பரசனும் இணைந்து நடித்திருந்தார். பிரம்மாண்ட கதைக்களத்துடன் வெளியான இப்படமானது, எதிர்பார்த்ததை விடவும் குறைவான வரவேற்பையே பெற்றிருந்தது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படம்தான் அமரன் (Amaran).

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) கூட்டணியில் இந்த படமானது வெளியானது. இப்படமானது மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் திரைப்படமாகவே அமைந்திருந்தது. இந்த படமானது, சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் சிறந்த படம் என்ற விருதை வென்றிருந்தது.

இதையும் படிங்க :  குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி என பல்வேறு பிரபலங்களும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது, மேடையில் பேசிய கமல்ஹாசன், அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனின் உழைப்பு பற்றி கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு கமல்ஹாசன் புகழாரம்:

அந்த நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், சிவகார்த்திகேயனை புகழ்ந்திருந்தார். அதில் அவர், “அமரன் படத்திற்காக  தோற்றத்தை மாற்றுங்கள் என்றதும் செய்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

இதையும் படிங்க : மெய்யழகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதை வென்றார் கார்த்தி

உடற்பயிற்சி செய்ங்க என்பது, கப்பை எடுத்து கொடுப்பது போல இல்லை, 100 தடவையாவது தம்பிலை தூக்கினால்தான் அந்த கை, அமரன் கையாக மாறும்” என்று நடிகர் கமல் ஹாசன், சிவகார்த்திகேயனை குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருது.

சிவகார்த்திகேயன் குறித்து கமல்ஹாசன் பேசிய வீடியோ :

சைமா விருதுகளை வென்ற அமரன் படக்குழு :

அமரன் படமானது, இந்த 2025ம் ஆண்டில் நடைபெற்றிருந்த சைமா விருது வழங்கும் விழாவில் சுமார் 4 விருதுகளை வென்றது. அமரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கு, சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த கதைக்கான விருது அமரன் படத்திற்கு மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷிற்கும் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட அமரன் படத்திற்கும் மட்டுமே 4 விருதுகள் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின்போதுதான், கமல்ஹாசன் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.