மெய்யழகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதை வென்றார் கார்த்தி
SIIMA Awards: 2024-ம் ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் விழா துபாயில் நடைப்பெற்றது. இதில் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான பலப் படங்களுக்கும் பல நடிகர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ரக்கட் நாயகனாக அறிமுகம் ஆகி சாக்லேட் பாயாக வலம் வந்து தற்போது ஆக்ஷன் ரொமாண்டிக் செண்டிமெண்ட் என்று எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் கார்த்தி (Actor Karthi). பருத்திவீரன் படத்தை தொடங்கி இறுதியாக இவரது நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் வரை நடிகர் காத்தியின் நடிப்பில் பலப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் துபாயில் சைமா விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதில் நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 27-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த இயக்குநர் பிரேம் குமார் தான் இந்தப் படத்தையும் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர் அரவிந்த் சாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சரண் சக்தி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், ரைச்சல் ரபேக்கா, மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி, ராஜ்குமார், இந்துமதி மணிகண்டன், ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன், வெற்றிவேல் ராஜா, எம்.எஸ்.பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
மெய்யழகன் படத்தின் கதை என்ன?
பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே தனது சொந்த அத்தை குடும்பத்தால் வீட்டை இழந்து ஊரை விட்டு செல்கின்றனர் அரவிந்த்சாமி குடும்பத்தினர். இதனால் உறவினர்கள் மீது வெறுப்பு உள்ளவராக இருக்கிறார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது சித்தப்பா மகள் திருமணத்திற்காக மீண்டும் சொந்த ஊரான நீடாமங்களத்துக்கு வருகிறார்.
அங்கு பெயரே தெரியாத ஒரு நபர் அத்தான் அத்தான் என்று அரவிந்த்சாமியை பாசத்தால் திழைக்க வைக்கிறார். அவர் யார் என்று தெரியாமலேயே அரவிந்த்சாமி அந்த ஊரைவிட்டு கிளம்புகிறார். அதன்பிறகு அவர் யார் அவர் என்ன முறை வேண்டும் என்பதை அரவிந்த்சாமி எப்படி தெரிந்துகொண்டார் என்பது படத்தின் க்ளைமேக்ஸ். இந்தப் படத்தில் அரவிந்த்சாமியை பாசத்தால் திழைக்க வைக்கும் உறவினராக நடித்தது நடிகர் கார்த்திதான். இந்த கதாப்பாத்திரத்திற்காகவே அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… லோகா சாப்டர் 1: சந்திரா படத்தின் மூத்தோன் இவர்தான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
இணையத்தில் கவனம் பெறும் கார்த்தியின் வீடியோ:
#Karthi gets, The Best Actor Award for #Meiyazhagan 🫂#Sardar2pic.twitter.com/8sQmkGgAXm
— Movie Tamil (@_MovieTamil) September 7, 2025
Also Read… இட்லி கடை படத்தில் விஷ்ணு வர்தனாக சத்யராஜ் – போஸ்டரை வெளியிட்ட படக்குழு