Vetrimaaran : கார்த்தியின் கைதி 2 படத்தில் நடிக்கிறேனா? வெற்றிமாறன் சொன்ன விளக்கம்!
Vetrimaaran About Acting : நடிகர் கார்த்தியின் நடிப்பில் புதியதாக உருவாக காத்திருக்கும் திரைப்படம்தான் கைதி 2. இதை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள நிலையில், இப்படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து வெற்றிமாறன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kaganaraj) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதாநாயகனாக நடிக்க, இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் கைதி 2 திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், அதிலும் நடிகர் கார்த்தி முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கூலி படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படமாக இந்த கைதி 2 (Kaithi 2) படமானது உள்ளது. இந்த படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaraan) சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இப்படத்தில் நடிப்பது குறித்த தகவல் பற்றி வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் பேசிய வெற்றிமாறன், கைதி படத்தில் நடிப்பதற்கு லோகேஷ் கூப்பிடவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : இயக்குநர் எச். வினோத் பிறந்தநாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ
வெற்றிமாறனின் STR49 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ பதிவு
வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள். ▶️https://t.co/6QoXAEq9PL@SilambarasanTR_ #VetriMaaran #KalaippuliSThanu #RVelraj #STR49 #VCreations47 pic.twitter.com/ys4zbVBwux
— Kalaippuli S Thanu (@theVcreations) September 4, 2025
லோகேஷின் இயக்கத்தில் நடிப்பது குறித்து வெற்றிமாறன் விளக்கம் :
அந்த நேர்காணலில் ரசிகர் ஒருவர் வெற்றிமாறனிடம், லோகேஷ் கனகராஜ் அவரின் படத்தில் உங்களை நடிப்பதற்கு அழைத்தாரா என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், ” உண்மையை சொல்லப்போனால், அவர் நடிப்பதற்கு என்னிடம் கேட்கவில்லை. என்னை நடிக்கவைக்கவேண்டும் என்று நினைத்ததாக லோகேஷ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். என்னை கைதி படத்தில் நடிக்கவைப்பதற்கு நினைத்ததாக எதோ ஒரு நேர்காணலில் லோகேஷ் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : குட் பேட் அக்லி பட இளையராஜா பாடல் விவகாரம்… விசாரணை தொடர்பாக வெளியான அறிவிப்பு
2018ம் ஆண்டு முதல் பலர் என்னிடம் படங்களில் ஏன் நடிக்கவில்லை என்று கேள்விகள் கேட்பார்கள், அதற்கு நான் சொல்லும் ஒரே பதில், வடிவேலுவின் காமெடியான “ஏன் நல்லாதானே போய்கிட்டு இருக்கு” என்றுதான். எனக்கு நடிப்பதற்கு பிடிக்காது, இயக்குநரை போல, நடிகராக இருப்பதும் கடினம்தான். நடிகராக மாறிவிட்டால் பார்க்கும் நோக்கம் மாறிவிடும்” என்று அந்த நேர்காணலில் இயக்குநர் வெற்றிமாறன் தெளிவாக பேசியிருந்தார். இதன் மூலமாக சினிமாவில் நடிப்பதற்கு விரும்பவில்லை என்று வெற்றிமாறன் அனைவரையும் தெளிவு படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.