Vetrimaaran : 50வது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிமாறன்.. அவரின் இயக்கத்தில் டாப் 5 மூவிஸ் லிஸ்ட்!
Vetrimaarans Top 5 Hit Films : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இன்று 2025 செப்டம்பர் 4ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் வெளியான டாப் 5 ஹிட் படங்கள் மற்றும் அவற்றை எந்த ஓடிடியில் காணாலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும், தயாரிப்பாளாராகவும் இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இன்று 2025 செப்டம்பர் 4ம் தேதியில் இயக்குநர் வெற்றிமாறன் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர் தற்போது சிலம்பரசனை (Silambarasan) வைத்து புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை வி க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் கலைப்புலி எஸ். தாணு (Kalaipuli S Thanu) தயாரித்து வருகிறார். இப்படத்தின் அப்டேட் , செப்டம்பர்4, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, இவரின் இயக்கத்தில் டாப் 5 படங்களை பற்றி பார்க்கலாம்.
ஆடுகளம் திரைப்படம்
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் நடிப்பில் மற்றும் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான படம் ஆடுகளம். இந்த படமானது சேவல் சண்டை கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இப்படத்தில் தனுஷுடன் நடிகை டாப்ஸி நடித்திருந்தார். இந்த படமானது தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் வாங்கி குவித்திருக்கிறது. இந்த படமானது சன் நெக்ஸ்ட் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஓடிடியிலும் உள்ளது.
இதையும் படிங்க : தனுஷிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை! அட இந்த படத்திலா?
விசாரணை திரைப்படம்
நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி மற்றும் சமுத்திரக்கனி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்திருந்த படம் விசாரணை. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்த படமானது காவல் நிலையத்தில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்த அதிரடி கதைக்களம் கொண்ட படமாக வெளியாகியிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இப்படமும் பல விருதுகளை பெற்றுள்ளது. இப்படமானது தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது.
வட சென்னை திரைப்படம்
வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்தது வட சென்னை. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் பாகம் இரண்டு வரும் 2026 ஆம் ஆண்டு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது அமேசான் ப்ரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது.
இதையும் படிங்க : அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை – இயக்குநர் வெற்றிமாறன்
அசுரன் திரைப்படம்
தனுஷ் மற்றும் மஞ்சு வாரியரின் முன்னணி நடிப்பில் வெளியான படம் அசுரன். இதில் நடிகர்கள் பசுபதி, அம்மு அபிராமி, டிஜே அருணாச்சலம் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது தீண்டாமை மற்றும் சாதி சார்ந்த ஒடுக்குமுறைகள் போன்ற கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்ககளில் இது சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இது தற்போது அமேசன் ப்ரைம் வீடியோ ஓடிடியில் உள்ளது.
விடுதலை
நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பல்வேறு நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் விடுதலை பார்ட் 1. இந்த படமானது வெற்றிமாறனின் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம்தான் சூரி கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமானார்.
விடுதலை படம் குறித்து சூரி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
இந்த படமானது காவல்துறையின் மற்றொரு முகத்தை காட்டுவதாக அமைந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் இதுவும் டாப் 5 இடத்தில் உள்ளது. இந்த படமானது அமேசன் ப்ரைம் மற்றும் ஜீ5 ஓடிடியிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.