Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்… தனுஷ் உடைத்த உண்மை!

Dhanush : தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்நிலையில் தனுஷ் முன்னதாக பேசிய நேர்காணலில் ஒன்றில் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்தது குறித்துப் பேசியுள்ளார். அதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ்பேக்… தனுஷ் உடைத்த உண்மை!
நடிகர் தனுஷ் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 18 May 2025 18:52 PM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் தென்னிந்திய நடிகர் மட்டுமல்லாமல் பான் இந்திய நாயகனாகவும் கலக்கி வருகிறார். இவர் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார். சினிமாவில் பல்வேறு திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் இறுதியாக வெளியான படம் ராயன் (Raayan). இந்த படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாகவே நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புதுமுக புதுமுக நடிகர்களைக் கொண்டு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்  (Nilavuku En Mel Ennadi Kobam) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது ஓரளவு வரவேற்பைக் கொடுத்திருந்தது. இதை அடுத்ததாகத் தமிழில் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படம் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ளது. தனுஷின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், தற்போதுவரை மிகவும் பிரபலமாகிப் பேசப்படும் படமாக அமைந்தது பொல்லாதவன் (Polladhavan ) . இந்த படத்தை இயக்கித்தான் இயக்குநர் வெற்றிமாறன் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாக்கிய முதல் படம் இதுதான். இந்த படமானது கடந்த 2007ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் தனுஷுடன், சந்தானம், ரம்யா, டேனியல் பாலாஜி எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது முழுக்க பைக் கதைக்களத்தை அடிப்படியாகக் கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர் தனுஷ் சிக்ஸ்பேக் வைத்தது அசத்தியிருந்தார். இந்நிலையில் இது குறித்து நடிகர் தனுஷ் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் இதற்காக இரண்டு வருடங்கள் கொடுமைகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

பொல்லாதவன் படத்தில் சிக்ஸ்பேக் வைத்தது குறித்த தனுஷ் பேசிய விஷயம் :

முன்னதாக பேசிய நேர்காணலில் நடிகர் தனுஷ், அண்ட் நேர்காணலில் சிக்ஸ்பேக் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நடிகர் தனுஷ், சிக்ஸ்பேக் வைக்கவேண்டும் என்றால் அதற்காகக் கொஞ்சம் ஒர்க் பண்ணனும். நான் பொல்லாதவன் படத்தில் மட்டும்தான் சிக்ஸ்பேக்கிற்காக முழுவதும் ஒர்கவுட் பண்ணேன். அதற்கு அப்புறம் தற்போதுவரை அதை தக்கவைத்துத்தான் கொண்டிருக்கிறேன். மேலும் பொல்லாதவன் படத்தை நனையும் வெற்றிமாறனுக்கு 2 வருடகாலமாகப் பண்ணோம். அப்போது வெற்றிமாறனிடம் நான்தான் சொன்னே,க்ளைமேக்ஸ் கொஞ்சம் பழைய படத்தகு போல் இருக்கிறது. அதை கடைசியில் வைத்துவிடலாம்.

மேலும் நான் சிக்ஸ்பேக் வைக்கிறேன் என்று கூறினேன். எனக்கு 2 வருஷம் ஆச்சு சிக்ஸ்பேக் வைப்பதற்கு, ஒல்லியா இருந்தால் சீக்கிரம் வைத்துவிடலாம் என்று கூறுவார்கள் ஆனால் எனது உடம்பிற்கு 2 வருடம் ஆனது. மேலும் பொல்லாதவன் படத்தின் சிக்ஸ்பேக் காட்சி ஷூட்டிங் முன்பு தண்ணீரே நானா குடிக்கவில்லை, அப்போதுதான் சிக்ஸ்பேக் நன்றாகத் தெரியும் என்று தண்ணீரே கொடுக்கவில்லை. எனக்கு ஸ்பூன் மூலமாகத்தான் தண்ணீர் தருவார்கள் அதுதான் கொஞ்சம் கொடுமையாக இருக்கும் என்று நடிகர் தனுஷ் கூறியிருந்தார்.

டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!
டெல்லியை கதறவிட்ட குஜராத்.. முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி!...
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!
திருமண வரவேற்பில் மணமகனின் கையில் துப்பிய மணமகள் - வைரல் வீடியோ!...
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மழை காலத்தில் டிரெக்கிங் போக விருப்பமா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க...
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!
வாடிவாசல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு.. வெற்றிமாறன் பதில்!...
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்
ஐபிஎல்லில் 5வது சதம்.. குஜராத் எதிராக சம்பவம் செய்த கே.எல்.ராகுல்...
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!
ஜூன் 14-க்குள் ஆதார் கார்டில் இத பண்னிடுங்க - இல்லனா சிக்கல்!...
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்
தோனியை சீண்டும் கோலி ரசிகர்கள்! திரும்பி அடிக்கும் தோனி ரசிகர்கள்...
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள் இவைதான்.. உடனே உஷாராகுங்க!...
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?
வசூலில் 'மாமன்' படத்தை முந்தியதா 'டிடி நெக்ஸ்ட் லெவல்'?...
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!
போராடிய ஜெய்ஸ்வாஸ்.. முடித்துவிட்ட ப்ரார்.. பஞ்சாப் வெற்றி!...
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop பயன்படுத்துவது எப்படி?...