Vetrimaaran : சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு வந்த சிக்கல்… வெற்றிமாறன் உடைத்த உண்மை!
Vetrimaaran About Vaadivaasal : சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் தான் வாடிவாசல். இந்த படமானது ஒட்டுமொத்த ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போகிறது. சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் சிக்கல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தனுஷ் (Dhanush) முதல் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) வரை பல உச்ச நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்நிலையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2). இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருடன் மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்தாக வெற்றிமாறன் சூர்யாவுடன் (Suriya) வாடிவாசல் (Vaadivaasal) படத்தில் இணைவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில காரணங்ககளால் தற்போது இப்படமானது ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தற்போது அவர் நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இந்த படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேட் கேர்ள் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்கான சிக்கல் குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போகிறேன் – வெற்றிமாறனின் அதிரடி முடிவு
வாடிவாசல் படத்தின் சிக்கல் குறித்து பேசிய வெற்றிமாறன்
பேட் கேர்ள் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த படக்குழுவினர்களுடன் இணைந்து வெற்றிமாறன் கலந்துகொண்டார். மேலும் இதில் இயக்குநர் மிஷ்கினும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய மிஸ்கின், வாடிவாசல் படத்தின் கதை, வெற்றிமாறன் மற்றும் சூர்யாவின் கூட்டணி பற்றியும் பேசினார். இந்நிலையில், மிஷ்கினை அடுத்ததாக மேடையில் பேசிய வெற்றிமாறன், “மிஷ்கின் சார் வாடிவாசல் படம் குறித்து விஷயங்களை போட்டுடைத்துவிட்டார்.
இதையும் படிங்க : ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்’ பட ரிலீஸ் மாற்றம்.. புதிய ரிலீஸ் தேதி இதோ!
நான் இங்கு மேடையில் அதை பற்றி எதுவும் சொல்ல முடியாது. அவரின் பக்கத்தில் சென்று நான் கூறுகிறேன். மேலும் வாடிவாசல் படத்தின் கதையில் நிறைய டெக்கனிகள் பிரச்னைகள் இருக்கிறது. அதை பற்றி நான் அவரிடம் தெளிவாக கூறிவிடுவேன். மேலும் எனது புதிய படத்தின் அறிவிப்புகள் இன்னும் 10 நாட்களில் வெளியாகும்” என்று அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார்.
வெற்றிமாறன் பேசிய வீடியோ பதிவு
#Vetrimaaran Next Film Update With In 10 Day’s 👏🏻
• #STRxVetrimaaran ✅
• #Vaadivaasal ❌— Movie Tamil (@_MovieTamil) September 1, 2025
வாடிவாசல் கைவிடப்பட்டதா ?
இந்த வாடிவாசல் திரைப்படத்தை பற்றிய தகவல்கள் முரணாக இருந்து வருகிறது. இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருந்த நிலையில், வி கிரியேஷன் நிறுவனமானது இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த படமானது ஜல்லிக்கட்டு கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாக கடந்த 2021 ஆம் ஆனது இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது தொடர்ந்து சூர்யாவும் சரி, வெற்றிமாறனுக்கு சரி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டேபோனது. தற்போது இந்த படமானது முழுவதும் கைவிடப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன.