Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை – இயக்குநர் வெற்றிமாறன்

Director Vetrimaaran: கோலிவுட் சினிமாவில் மிகவும் அழுத்தமான கதைகளை இயக்குவதில் பெயர் பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். சமூகம் சார்ந்த பிரச்னைகளை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படங்கள் தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை – இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Sep 2025 16:54 PM

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெற்றிமாறன். அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இயக்குநரான வெற்றிமாறனுக்கு மட்டும் இன்றி நடிகர் தனுஷிற்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களை தொடர்ந்து இவர்களின் காம்பினேஷனில் நிறையப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. பொல்லாதவன் படத்தை தொடர்ந்து அடுத்தப் படமும் நடிகர் தனுஷை வைத்தே இயக்கிநார் வெற்றிமாறன். அந்தப் படம் ஆடுகளம். சேவல் சண்டையை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான 7 படங்களில் 4 படங்கள் நடிகர் தனுஷ் தான் நாயகன். அப்படி நடிகர் தனுஷ் நடிக்காத படத்தில் அவரது பங்களிப்பு எதாவது ஒரு விதத்தில் இருக்கும். அதன்படி படத்தின் தயாரிப்பு அல்லது படத்தில் ஏதேனும் பாடல் பாடுவது இப்படி எதாவது ஒரு விதத்தில் வெற்றிமாறனின் படங்களில் தனுஷின் பங்கு நிச்சயமாக இருக்கும். இதன் மூலமே அவர்களின் நட்பு எவ்வளவு நெறுக்கமானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளலாம்.

விசாரணை படத்தை இப்படிதான் எடுத்தோம்:

இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது ஆடுகளம் படம் முடிந்த பிறகு விசாரணை படத்தை தயாரிப்பதற்காக தனுஷிடம் கேட்டேன். அவர் படத்தின் ஒன் லைன் மட்டும் கேட்டுவிட்டு தயாரிப்பதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டார். நான் சொன்ன தொகையை அவர் கொடுத்துவிட்டார். பின்பு படத்திற்காக நாங்கள் எதிர்பார்க்காததையும் செய்தார்.

அந்த நேரத்துல படம் செலவு செய்த தொகையை விட பெரிய அளவில் வசூலை பெறவில்லை. அதனால் நான், நடிகர்கள் தினேஷ் மற்றும் கிஷோர், ஜிவி பிரகாஷ் என நாங்கள் படத்திற்கு எந்த சம்பளமும் எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… 9 வருடத்தில் 6 படங்கள்.. நான் பெருமையாக சொல்வேன்- லோகேஷ் கனகராஜ்!

இணையத்தில் கவனம் பெறும் வெற்றிமாறனின் பேச்சு:

Also Read… Madharaasi : ரிலீசிற்கு தயாராகும் மதராஸி.. ரசிகர்களை கவரும் ‘தங்கப்பூவே’ லிரிக்கல் பாடல்!