9 வருடத்தில் 6 படங்கள்.. நான் பெருமையாக சொல்வேன்- லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில், தனது படங்களில் நடிகர்களுடன் பணியாற்றியது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் கடைசியாக வெளியான படம் கூலி (coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், கடந்த 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இதில் ரஜினியுடன் பல்வேறு பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை தமிழ் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படமானது தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், 9 வருடங்களில் 6 படங்களை இயக்கியது குறித்தும் மற்றும் அதில் நடிகர்களுடன் பணியாற்றியது குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : கூலியில் ரஜினியின் டப் பண்ணலையா? அது AI- வாய்ஸா ? – லோகேஷ் கனகராஜ் உடைத்த உண்மை!
22 நடிகர்களுடன் பணியாற்றியது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசிய விஷயம்
அந்த நேர்காணலில் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜிடம், நீங்கள் படங்களில் பல பிரபல நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள், எவ்வாறு அவர்களை சம்மதிக்கவைத்தீர்கள்? என கேள்விகேட்டார். அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “இயக்குநராக இருப்பதில் அது முக்கியமான வேலை. நடிகர்களை சமரசப்படுத்தவில்லை என்றால், அவர்கள் நமது படத்தில் நடிக்கமாட்டார்கள்.
இதையும் படிங்க : அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
இதை நான் ஒரு பெருமையாக கூட சொல்வேன், 6 திரைப்படங்கள்தான் பண்ணிருக்கிறேன் இந்த 9 வருடங்களில், நான் சினிமா துறையில் நிறைய பங்களித்திருக்கிறேன். இதுவரை 22 நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர்களை சம்மதிக்க வைத்ததால் இந்த படங்களை பண்ணியிருக்கிறேன்” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் பேசியிருந்தார். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜின் லேட்டஸ்ட் எக்ஸ் பதிவு
Honourable Chief Minister @CMOTamilNadu sir, thank you so much for your wishes and love for #Coolie sir 🤗❤️❤️ pic.twitter.com/4c1ubLizuz
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 13, 2025
லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் :
லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை தொடர்ந்து, இயக்குநர் அருண் மாதேஷ்வரனின் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த கையேடு, நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. கைதி 2 படமானது வரும் 2027ம் ஆண்டு வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.