Ajith Kumar : அஜித்தும் ரஜினிகாந்த் ரசிகரா? அவரின் ரிங்க்டோன் என்ன தெரியுமா?
Ajith Kumars Phone Ringtone : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அஜித் குமார். இவர் தற்போது படங்களை தொடர்ந்து கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ரசிகர் ஒருவரிடம் அஜித் பேசும்போது, அவரின் போனில் அழைப்பு வந்திருக்கிறது, அவரின் போன் ரிங்க்டோனாக ரஜினிகாந்தின் பாடலை வைத்திருக்கிறாராம்.

கோலிவுட் சினிமாவில் ரசிகளால் ஏகே என அழைக்கப்படுபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இதுவரை சுமார் 63 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை தமிழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அஜித் குமாருடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஜித் குமார் முழுவதுமாக கார் ரேஸில் (Car Race) கலக்கி வருகிறார். இவர் இதுவரை சுமார் 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவின் சார்பாக இரு போட்டிகளில் 3வது இடத்தையும், ஒரு போட்டியில் 2வது இடத்தையும் அஜித்தின் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், மேலும் தற்போதும் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் குமார் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அஜித் குமார் ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரின் போனில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அவரின் போனில் ரிங்க்டோனாக (Ringtone ) எந்த பாடலை வைத்திருக்கிறார் தெரியுமா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) திரைப்பட பாடலை வைத்திருக்கிறாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் (Jailer) திரைப்படத்தில் இடம்பெற்ற, ஹுக்கும் (Hukum) பாடலை அஜித் குமார் தனது போனில் ரிங்க்டோனாக வைத்துள்ளாராம். இந்த தகவலானது தற்போது அஜித் குமார் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : சிவா மனசுல சக்தி பார்ட் 2 உருவாகிறதா? வைரலாகும் ஜீவாவின் பதிவு!
அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் :
#AjithKumar Recent Click 👀 pic.twitter.com/OuurNWMafG
— Movie Tamil (@_MovieTamil) August 29, 2025
ரஜினியின் ரசிகர்களாக அஜித் மற்றும் விஜய்
நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் சுமார் 171 திரைப்படங்கள் இதுவரை வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவரின் ரசிகர்களாக விஜய் மற்றும் அஜித் குமார் இருந்து வருகின்றனர். விஜய் குறித்து முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்தான் லியோ படம் முடிந்ததும், தலைவர் ரஜினிகாந்த்துடன் படம் பண்ணும்படி கூறியதாகவும், அதை தொடர்ந்துதான் ரஜினிகாந்த் சாருடன் படத்தில் இணைந்ததாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!
இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் குமாரும், ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்பட பாடலை போனில் ரிங்க்டோனாக வைத்திருக்கும் நிலையில், இது குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.