ஜெயிலர் 2 படத்தில் ஃபைனல் ஷூட்டிங் எங்கு எப்போது? வைரலாகும் தகவல்
Jailer 2 Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் படப்பிடிப்பு எப்போது முடியும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்ற நிலையில் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்கள் நடித்து இருந்ததால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக படம் இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து தெருவித்து வந்தனர். மேலும் படம் மட்டும் இல்லாமல் படத்திற்கு இசையமைப்பளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளியீடிற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் பங்கேற்றார்.
முன்னதாக ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதில் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் இது டூப் காட்சிகள் கிரீன் மேட் என்று ட்ரோல் செய்தனர். இதனால் படக்குழு படத்தின் டீசர் வீடியோவின் படப்பிடிப்பை வெளியிட்டது. இது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.




ஜெயிலர் 2 படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின் அப்டேட் இதோ:
இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் படபிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை கூலி படத்தை தயாரித்து வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் ஜெயிலர் 2 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கோட்டயம் நசீர், மிர்னா மேனன், அன்ன ராஜன் ஆகியோர் உடன் இணைந்து நடிகர்கள் நந்தமுரி பாலகிருஷ்ணா, சிவ ராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, மோகன்லால் ஆகியோர் கேமியோ ரோலிலும் நடித்து வருகின்றனர்.
Also Read… ரவி மோகன் சார் படம் தயாரிப்பதில் நான் உங்க சீனியர்… கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
– The final schedule of #Jailer2 will take place in Goa.
– This schedule is going to start in November.
– Work has begun for a grand set in Goa.#SuperStarRajinikanth #Nelson pic.twitter.com/vx8LvfKsye— Movie Tamil (@_MovieTamil) August 25, 2025
Also Read… சந்தோஷ் சுப்ரமணியம் ஹிட் சீனை ரீ கிரியேட் செய்த ஜெனியா – ரவி மோகன்