யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்திற்கு முன்னதாக தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த நிலையில் படம் ஏ சான்றிதழ் உடன் திரையரங்குகளில் வெளியானது. ஏ சான்றிதழ் உடன் படம் உலகம் முழுவதும் வெளியாகி இருந்தாலும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியதால் 18 வயதிற்கு குறைவானவர்கள் படம் பார்க்க திரையரங்குகளில் வர முடியாத காரணத்தால் குடும்பத்தினருடன் படம் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் முன்னதாக படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கும் அளவிற்கு படத்தில் வன்முறை காட்சிகள் இல்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதனால் படம் பார்க்க முடியாதவர்கள் தங்களது வருத்தை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க கோரி படக்குழு நீதிமன்றத்தை நாடியது. மேலும் ஏன் யு/ஏ சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் தெரிவித்து இருந்தனர்.
கூலி படக்குழு தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்:
இந்த நிலையில் இந்த வழக்கு கடந்த 20-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை 25-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு அதாவது இன்று ஒத்தி வைத்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு மீண்டும் வந்தது.
அப்போது படக்குழு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் படத்தில் உள்ள கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது என்றும் மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சண்டைக்காட்சிகள் இல்லாத தமிழ் படங்களைப் பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தணிக்கை குழு சார்பாக வாதித்த வழக்கறிஞர் படத்தில் உள்ள வன்முறை காட்சிகளை நீக்கிவிட்டு பிறகு யு/ஏ சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்குமாறு தெரிவித்தார். இந்த நிலையில் இரு தரப்பினர் வாதத்தைக் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
கூலி படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Pure madness!🔥 Watch the #Kokki lyric video🖤 #Coolie
▶️ https://t.co/XC6UiW0Y2x #Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @Reba_Monica… pic.twitter.com/4RkP3Zd1QX
— Sun Pictures (@sunpictures) August 25, 2025
Also Read… விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு