Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் புரமோஷன் நிக்ழ்ச்சிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் வீடியோ தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்
நடிகர் சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2025 14:38 PM

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மதராஸி. படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ் எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் ஆகஷன் படமாக உருவாகியுள்ள இந்த மதராஸி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் இவர் முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏஸ் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், மோனிஷா விஜய், ஷபீர் கல்லாரக்கல், பிரேம் குமார் என பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியாவில் பல பகுதிகளுக்கு சென்று மதராஸி படக்குழு புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அந்த புரமோஷன் விழாக்களில் பேசுவது தொடர்ந்து இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நேற்று புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

நான் விஜய் சார் ரசிகர்களை கவர முயற்சி செய்றேனா?

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ செய்து இருந்தார். அதில் இருந்தே தொடர்ந்து சிவகார்த்திகேயன் மீது இந்த கருத்து நிலவுகிறது. விஜய் படங்களில் நடிப்பதில் இருந்து அரசியலுக்கு செல்வதால் அவரின் ரசிகர்களை கவர சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார் என்று.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சிவகார்த்திகேயன் யார் ரசிகர்களையும் யாராலையும் பிடிச்சுட முடியாது. அந்த நடிகர் நடிச்சாலும் நடிக்கலனாலும் ஒரு தடவ அவங்களுக்கு ரசிகரா இருக்கவங்க கடைசி வரைக்கும் அவங்களுக்குதான் ரசிகரா இருப்பாங்க என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போகிறேன் – வெற்றிமாறனின் அதிரடி முடிவு

இணையத்தில் கவனம் பெறும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… பாக்ஸ் ஆபிஸில் கோடி கோடியா வசூலிப்பது படத்தின் வெற்றி இல்லை – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்