இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் அர்ச்சனா – அருண் திருமண நிச்சய செய்தி!
Actors Archana And Arun: சின்னத்திரையில் சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான நடிகை அர்ச்சனாவிற்கும் சீரியலில் நாயகனாக நடித்து பிரபலம் அடைந்த அருணிற்கு திருமண நிச்சயம் நடந்து முடிந்துள்ளது இது குறித்து அவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வெள்ளித்திரை மட்டும் இன்றி சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு உள்ளது. ஏன் வெள்ளித்திரையை விட சின்னத்திரை நடிகர்கள் தான் ரசிகர்களுன் நினைவில் அதிகமாக இருப்பார்கள். காரணம் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் தொலைக்காட்சி வழியே அவர்களின் முகங்களை ரசிகர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் முன்பு எல்லாம் வெள்ளித்திரையில் நடித்த நடிகர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது மட்டுமே ரசிகர்களுக்கு அதிகமாக தெரியும். ஏன் என்றால் செய்தி தொலைக்காட்சிகளில் அதுமட்டுமே பெரிதாக பேசப்படும். சின்னத்திரை நடிகர்களின் காதல் திருமணம் பலருக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போதைய சூழல் அப்படி இல்லை. இணையதள பயன்பாடு மக்களிடையே அதிகரித்தப் பிறகு வெள்ளித்திரையைப் போல சின்னத்திரை செய்திகளையும் ரசிகர்கள் மிகவும் எளிதாக தெரிந்துகொள்கின்றனர்.
மேலும் வெள்ளித்திரையில் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்வது போல சின்னத்திரையில் நடிகர்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு வருடத்தில் பல காதல் திருமணங்கள் சின்னத்திரையில் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது சுட சுட ஒரு திருமண செய்தி இணையத்தை கலக்கி வருகின்றது. அது யார் என்றால் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் மற்றும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக கலக்கிய அர்ச்சனா இருவருக்கிம் திருமண நிச்சயம் நடைப்பெற்றதுதா.
சத்தமில்லாமல் முடிந்தது அருண் – அர்ச்சனா திருமண நிச்சயம்:
ஒரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேறு வேறு சீரியல்களில் நடித்த இந்த நடிகர்கள் இருவரும் காதலித்து வரும்போதே கிசுகிசுக்கள் அதிகமாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7-வது சீசனில் வைல்ட்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்து ரசிகர்களின் மனதை வென்றது மட்டும் இல்லாமல் டைட்டிலையும் வென்றார்.
அதனைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக அனைவரின் மனதில் பதிந்த அருண் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். வெற்றியாளராக பல முயற்சிகள் எடுத்தும் அருணால் வெற்றிப்பெறமுடியவில்லை. ஆனாலும் அவரது சீரியல் புகழ் அவரைவிட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கிசு கிசு செய்திகளில் இடம் பிடித்து வந்த அருண் மற்றும் அர்ச்சனாவின் காதல் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் எப்போது இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல சேதி சொல்லியிருக்கிறார்கள். அதன்படி இவர்களின் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதாக அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… ‘நீங்க நல்லவர்தான்’ – வார்த்தையை விட்ட தொகுப்பாளர்.. கடுப்பாகி பதிலளித்த நடிகர் யோகிபாபு
நடிகர் அருண் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… பைசன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!