விரைவில் நடிகை நிவேதா பெத்துராஜிற்கு டும் டும் டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
Actress Nivetha Pethuraj: நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் சமீபத்தில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இவரது ரசிகர்கள் இவரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஒரு நாள் கூத்து. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Director Nelson Venkatesan) இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் தினேஷ், மியா, நிவேதா பெத்துராஜ், தேவ் ராம்நாத் மற்றும் ரித்விகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் மூலமாக நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனா. இதில் பல கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் நடிகை நிவேதா பெத்துராஜ் ரசிகர்களிடையே தனியாக தெரிய காரணம் படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர்தான். ஆம் நிவேதா பெத்துராஜ் மற்றும் தினேஷிற்கு படத்தில் அடியே அழகே என்ற பாடல் உள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்காரணமாகவே நடிகை நிவேதா பெத்துராஜ் அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டே தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகை நிவேதா பெத்துராஜ் பலப் படங்களில் நடித்து வந்தார். 2016-ம் ஆண்டு தொடங்கிய சினிமா வாழ்க்கையை 2023-ம் ஆண்டு இறுதியாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்னும் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது நிவேதா பெத்துராஜின் ரசிகர்களுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிடும் பதிவுகளைப் பார்த்து சற்று ஆறுதல் அடைந்துகொள்கிறார்கள்.




காதலை அறிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ்:
இந்த நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தான் காதலிக்கும் ராஜித் இப்ரான் உடன் கட்டிப்பிடித்து நிற்கிறார்.
இதன் மூலம் இவரது காதலை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த நடிகை நிவேதா பெத்துராஜ் துபாயில் செட்டிலாகிவிட்டது அவரது ரசிகர்கள் அறிந்த விசயமே. அங்கு உள்ள ராஜித் இப்ரான் என்ற தொழிலதிபரைதான் நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது காதலித்து வருகிறார். இவர்களின் திருமணம் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெறும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… எதிரி யாருன்னு யோசிக்காம சண்டை செய்யனும் – ஹரிஷ் கல்யாணின் டீசல் பட டீசர் இதோ!
நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
View this post on Instagram
Also Read… இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே பாடலின் லிரிக்கள் வீடியோ!