இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே பாடலின் லிரிக்கள் வீடியோ!
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததா திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. தனுஷின் நடிப்பில் 52-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அவரே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. அவரது நடிப்பில் 52-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அவரே எழுதி இயக்கி உள்ளார். இது நடிகர் தனுஷ் இயகத்தில் வெளியாகும் 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய மூன்றுப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் 4-வதாக உருவாகியுள்ள இட்லி கடை என்ற இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் உடன் இணைந்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவரது தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸின் கீழ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளது முன்னதாக படத்தின் போஸ்டர் வெளியான போது தெரியவந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர் இரண்டாவது முறையாக நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்ரகணி, பார்த்திபன், வடிவேலு மற்றும் இளவரசு என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.




இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிளை வெளியிட்ட படக்குழு:
கடந்த ஏப்ரல் மாதமே திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்பு படப்பிடிப்பு பணிகள் முடிவடையாத காரணத்தை வெளியீட்டை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிளான எஞ்சாமி தந்தானே பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Not just a song, a celebration of where we come from 🔈
Enjaami Thandhaane – second single from #IdliKadai out now
Worldwide in Cinemas from October 1st.
▶️ https://t.co/lQyzT2nDig@dhanushkraja @arunvijayno1 @RedGiantMovies_ @gvprakash @menennithya @DawnPicturesOff… pic.twitter.com/iwHTV7WsX8
— Wunderbar Films (@wunderbarfilms) August 27, 2025
Also Read… ஹார்ஸ்டாரில் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம் ஃபலிமி!