Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தளபதி விஜய்யுடன் ஒரே மேடையில் சூர்யா, அஜித் ரஜினிகாந்த்.? என்ன காரணம் தெரியுமா?

Jana Nayagan Audio Launch Update : தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் இறுதியாக உருவாகியிருக்கும் படம்தான் ஜன நாயகன். விஜய்யின் 69வது திரைப்படமான இதை, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல்கள் பரவி வருகின்றன.

தளபதி விஜய்யுடன் ஒரே மேடையில் சூர்யா, அஜித் ரஜினிகாந்த்.? என்ன காரணம் தெரியுமா?
சூர்யா, ரஜினிகாந்த், விஜய் மற்றும் அஜித் குமார் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 25 Aug 2025 23:17 PM

இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், தளபதி விஜய் (Thalapathy Vijay) நடித்திருக்கும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் தளபதி 69 (Thalapathy 69) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்றும் கூறபடுகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தளபதி விஜய் தற்போது முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) ஜோடியாக நடித்துள்ளார். இந்த ஜன நாயகன் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அதை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ளதாம். ஜன நாயகன் திரைப்படம் விஜய்யின் இறுதி படம் என்பதால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் அஜித் குமார் (Ajith Kumar), சூர்யா (Suriya), ரஜினிகாந்த் (Rajinikanth), கமல் ஹாசன் உட்பட பல்வேறு உச்ச நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க : உலக அளவில் 100 கோடி வசூலித்த தலைவன் தலைவி படம் – உற்சாகத்தில் படக்குழு

இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இது ஒரு வேலை நிஜமாக நடந்தால், கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களை ஒரே மேடையில் பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது :

தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் திரைப்படமானது, அவரின் இறுதி திரைப்படம் என கூறப்படுகிறது. அவர் இப்படத்தை அடுத்ததாக முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு சோகத்தை தந்தாலும், ஒரு அரசியல்வாதியாக அவரை பார்த்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். இந்த ஜன நாயகன் படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : அஜித்தின் தீனாவினால் அந்த வாய்ப்பு கிடைத்தது – ஏ.ஆர். முருகதாஸ் உடைத்த உண்மை!

அதன்படி ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 2025, டிசம்பர் மாதத்தின் இறுதியில் மலேசியாவில் நடைபெறவுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்றால் அதிகம் கூட்டம் கூடிவிடும் என கூறப்படும் நிலையில், வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, ரஜினிகாந்த், சூர்யா, அஜித் குமார், உட்பட பல்வேறு நடிகர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

விஜய் வெளியிட்ட ஜன நாயகன் பட போஸ்டர் பதிவு :

இப்படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, நரேன், பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா, டீஜே உட்பட பல பிரபலங்ககள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் தனுஷும் இப்படத்தின் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், கே.வி. என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.