உலக அளவில் 100 கோடி வசூலித்த தலைவன் தலைவி படம் – உற்சாகத்தில் படக்குழு
Thalaivan Thalaivi: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது வசூலிலும் சாதனைப் படைத்து வருகின்றது. அதன்படி படக்குழு வெளியிட்ட அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று எந்த கொள்கையும் இல்லாமல் நாயகன், வில்லன் மற்றும் கேமியோ என அனைத்தையும் கலந்து கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 53-வது படமாக சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதி கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது போல வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் தீபா, செம்பன் வினோத், ரோஷ்ணி ஹரிபிரியன், சரவணன், மைனா நந்தினி, காளி வெங்கட், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, செண்ட்ராயன் என்று பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
100 கோடி வசூல் க்ளப்பில் இணைந்த தலைவன் தலைவி படம்:
அதன்படி தலைவன் தலைவி படம் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தொடர்ந்து படத்தின் வசூல் மற்றும் படத்தின் பாடல்கள், ஸ்னீக் பீக் வீடியோ ஆகியவற்றை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.
அதன்படி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை இன்று 24-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். அதில் தலைவன் தலைவி படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவு தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… வல்லவன் படம் ரிலீஸானப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன் – நடிகை சந்தியா!
தலைவன் தலைவி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Families’ favourite #ThalaivanThalaivii marks 100 CR worldwide gross with your endless love & support ❤️🫶@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @SathyaJyothi @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor @MynaNandhini… pic.twitter.com/VdDkK7opoL
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 24, 2025
Also Read… மலையாள சினிமாவில் ஒரு ஜாதி ஜாதகம் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!