இணையத்தில் கவனம் பெறும் ஜெயிலர் 2 படம் குறித்த முக்கிய தகவல்
Jailer 2 Movie Update: கூலி படத்தின் படப்பிடிப்பு முடித்த உடனே அதன் வெளியீட்டிற்கு முன்னதாகவே ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 74 வயதாகியும் சற்று கூட ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து பிசியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதைப் பார்த்து பலரும் பிரமித்துபோகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். ஆக்ஷன் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், யோகி பாபு, ஜாபர் சாதிக், ஜி.மாரிமுத்து, VTV கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, மிர்னா மேனன், ரித்விக், ஹர்ஷத், சரவணன், அறந்தாங்கி நிஷா, மகாநதி சங்கர், பதம் வேணு குமார், கராத்தே கார்த்தி, சுகுந்தன், பில்லி முரளி, பாவெல் மணி, சூரஜ் பாப்ஸ், நடனக் கலைஞர் ரமேஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்த நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




விறுவிறுப்பாக நடைப்பெறும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள்:
முதல் பாகத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலியே இயக்குநர் பயங்கரமான ட்விஸ்ட் உடன் முடித்துவிட்டார். இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பாதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் படத்தை தொடர்ந்து வேட்டையன் மற்றும் கூலி படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் 2 பாகத்திற்காக படப்பிடிப்பு பணியில் பிசியாக இருக்கிறார்.
இந்த நிலையில் முதல் பாகத்தில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்து இருந்த நிலையில் இந்த இரண்டாம் பாதியில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமுடு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் முன்னதாக் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பாலியல் தொல்லை சினிமாவில் மட்டும் இல்லை… நடிகை சுவாசிகா ஓபன் டாக்
ஜெயிலர் 2 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Sambhavam-dhan! Terrific 10M+ Real-time views for #Jailer2 Announcement Teaser😎
▶️ https://t.co/WbQ82995w5@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial#Jailer2AnnouncementTeaser #SunPictures #TheSuperSaga pic.twitter.com/4LHYklYzUD
— Sun Pictures (@sunpictures) January 15, 2025
Also Read… 15 ஆண்டுகளை நிறைவு செய்த நான் மகான் அல்ல படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?