Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹார்ஸ்டாரில் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம் ஃபலிமி!

Falimy Movie: மலையாள சினிமாவில் இயக்குநர் நடிகர் என மாஸ் காட்டி வருபவர் பேசில் ஜோஜஃப். இவரது இயக்கத்தில் மலையாள சினிமாவில் வெளியான படங்கள் ரசிஅக்ர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைப் போல இவர் நடித்தப் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஹார்ஸ்டாரில் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய படம் ஃபலிமி!
ஃபலிமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 27 Aug 2025 01:23 AM

மலையாள சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஃபலிமி. காமெடி ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் நித்திஷ் சகாதேவ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் (Actor Basil Joseph) நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர்கள் ஜெகதீஷ், மஞ்சு பிள்ளை, சந்தீப் பிரதீப், அபிராம் ராதாகிருஷ்ணன், போலோரம் தாஸ், மீனாராஜ் பள்ளுருத்தி, அமித் மோகன் ராஜேஸ்வரி, ஜோமன் ஜோதிர், ரெய்னா ராதாகிருஷ்ணன், அனில்ராஜ் திருவனந்தபுரம், குட்டப்பன், அருண்சோல், ஆர்யன் கதுரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் லட்சுமி வாரியர், கணேஷ் மேனன், அமல் பால்சன் ஆகியோர் இணைந்து சியர்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், சூப்பர் டூப்பர் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தது  இருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல இந்தப் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஃபலிமி படத்தின் கதை என்ன?

டப்பிங் ஆர்டிஸ்டாக இருக்கும் நடிகர் பேசில் ஜோசஃபிற்கு திருமண வரன் பார்த்து வருகிறார்கள் அவரது வீட்டில். அப்போது ஒரு டீச்சர் வேலை பார்க்கும் பெண்ணை பார்த்து முடிவு செய்கிறார்கள். அப்போது அந்த பெண்ணுடன் நிச்சதார்த்தம் நடைபெறும் போது அந்தப் பெண்ணை ஒருதலையாக காதலித்த நபர் அந்த நிச்சயதார்த விழாவிற்கு வந்து பிரச்னை செய்கிறார்.

இதனால் மாப்பிள்ளை குடும்பத்தினரான பேசில் ஜோசஃபின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிடுகின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படும் பேசில் ஜோசஃபிற்கு திருமணம் நடந்ததா? அவரது குடும்பத்தினர் அதனை எப்படி சரி செய்தனர் என்பதை காமெடியாக எடுத்துள்ளனர். இந்தப் படம் தற்போது ஹார்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… மதராஸி படத்தின் ட்ரெய்லரை பாராட்டிய 3 BHK பட நாயகி!

பேசில் ஜோசஃபின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… பாகுபலி தி எபிக் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு!