Sivakarthikeyan : எஸ்.ஜே.சூர்யாவின் மைண்ட் வாய்ஸ் இதுதான்.. நகைச்சுவையாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan About SJ Suryah: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இன்று 2025, ஆகஸ்ட் 26ம் தேதியில் நடைபெற்ற ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டிருந்தனர். அதில் அவர், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை பற்றி பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugados) இயக்க, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் நடிகை ருக்மிணி வசந்த் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணி இப்படத்தில்தான் முதன் முறையாக இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் (Ravi Mohan) தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்கவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட நகைச்சுவையான கேள்விக்கு, சிவகார்த்திகேயன் சிறப்பான பதிலை கொடுத்திருந்தார். அதில் சிவகார்திகேயனிடம் எஸ்.ஜே. சூர்யாவின் (SJ Suryah) மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பதிலளித்திருந்தார்.




இதையும் படிங்க : எகிறும் எதிர்பார்ப்பு.. சாதனைப் படைத்த மதராஸி ட்ரெய்லர்!
எஸ்.ஜே. சூர்யாவை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பேசிய விஷயம்
அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பல பிரபலங்ககளை பற்றி பேசியிருந்தார். தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யாவை பற்றி பேச தொடங்கிய அவர், எஸ்.ஜே. சூர்யாவின் மைண்ட் வாய்ஸ் இப்படிதான் இருக்கும் என பேச தொடங்கினார். அதில் சிவகார்த்திகேயன், ” படம் இயக்கிவந்தவனை திருப்பியும் நடிக்க கூட்டிட்டு வந்துட்டாங்க ரவி சார், இப்ப நான் நடிக்கிறதா? அல்லது படத்தை இயக்குவதா? என எஸ்.ஜே. சூர்யாவின் மைண்ட் வாய்ஸ் இருக்கும்” என சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பேசியிருந்தார்.
இதையும் படிங்க : துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பா?
தொடர்ந்து பேசியா சிவகார்த்திகேயன் , “ஆனால் ஏ.ஜே. சூர்யா சார் எல்லாமே சிறப்பாக பண்ணுவாரு, அதுதான் எஸ்.ஜே.சூர்யா சார்” என நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவை பற்றி நகைச்சுவையாக பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எஸ்.ஜே.சூர்யா குறித்து சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ
#Sivakarthikeyan mimics like #SJSuryah 😁😁👌pic.twitter.com/9TVLPEyF8D
— Sugan Krish (@Im_Sugan07) August 26, 2025
சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த படம்
நடிகர் சிவகார்திகேயன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் கூட்டணியில் ஒரே படம்தான் வெளியாகியிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான டான் படத்தில்தான், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.