Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 BHK படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட்டர்… நெகிழ்ந்த இயக்குநர்

3 BHK Movie: பெரும்பான்மையான மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கனவு சொந்த வீடு. இந்த சமூகத்தில் இருக்கும் இந்த பிரச்னையை மையமாக வைத்து கடந்த ஜூலை மாதம் கோலிவுட் சினிமாவில் வெளியான படம் 3 BHK. இந்தப் படத்தை பிரபல கிரிக்கெட்டர் பாராட்டியது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சிய்டைந்துள்ளார்.

3 BHK படத்தைப் பாராட்டிய பிரபல கிரிக்கெட்டர்… நெகிழ்ந்த இயக்குநர்
3 BHKImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2025 23:55 PM

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Director Sri Ganesh) எழுதி இயக்கிய படம் 3 BHK. இவர் கடந்த 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் அறிமுகம் ஆன படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஸ்ரீ குமார் நடிகர் அதர்வாவை வைத்து குருதி ஆட்டம். ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் 3 BHK . இந்தப் படம் சமூகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னையை மையமாக வைத்து வெளியானதால் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் மீத்தா ரகுநாத், சைத்ரா ஜே ஆச்சர், சரத்குமார், தேவயாணி, யோகி பாபு, சுப்ரமணியம் பஞ்சு அருணாச்சலம், தலைவாசல் விஜய், யோகி பாபு மற்றும் விவேக் பிரசன்னா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

3 BHK படத்தைப் பாராட்டிய கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்:

இந்த நிலையில் 3 BHK படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் ரெட்டிட் என்ற சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.

அந்த கேள்வி பதில் உரையாடலில் சச்சின் டெண்டுல்கரிடம் அவருக்கு சமீபத்தில் பார்த்த படத்தில் பிடித்தது எது என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 3 BHK படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் மிகவும் அருமையாக இருந்தது என்று தெரிவித்து இருந்தார். இதற்கு 3 BHK படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Also Read… விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு