Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு

Amaran Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான ப்டம் அமரன். திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்திற்கு கேரளாவில் தற்போது விருது ஒன்றை வழங்மி பெருமை படுத்தியுள்ளனர். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கிடைத்த புது விருது… மகிழ்ச்சியில் படக்குழு
அமரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Aug 2025 20:10 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Actor Sivakarthikeyan) நடிப்பில் 22-வது படமாக திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருந்தார். மேலும் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருந்த நிலையில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராகுல் போஸ், ஹேதாக்ஷி வி., புவன் அரோரா, லல்லு, அன்பு தாசன், ஷ்யாமபிரசாத், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், கீதா கைலாசம், பால் டி. பேபி,  ராஜு ராஜப்பன், உமைர் லத்தீப், ஷைலா தாஸ், சுகம்யா சங்கர், ஷிருஷ் ஜூட்ஷி, நவ்யா சுஜ்ஜி, மிர் சல்மான், ரோஹ்மன் ஷால், கௌரவ் வெங்கடேஷ், அஜய் நாக ராமன், பிரயாஸ் மான், அபினவ் ராஜ், ரோஹன் சூர்யா கனுமா ரெட்டி, ஜான் கைப்பள்ளி, வைபவ் முருகேசன், விகாஸ் பங்கர், ஹனுன் பாவ்ரா, விஜய் கார்த்திக், சூர்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தை நடிகர் கமல் ஹசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இடர்நேஸ்னல் நிருவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் படம் கடந்த 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரையரங்குகளில் வெளியாகிர் அசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் பல விறுதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் விருது வென்ற அமரன் படம்:

இந்த படம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. படத்தில் நடிகர் சிவகார்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும் நடிகை சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக இருந்தாலும் படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் காட்சிகளால் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படம் தற்போது கேரளாவில் உள்ள 48வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த பிற மொழி திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. மேலும் இந்த விருதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெற்றதை படக்குழு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

Also Read… இட்லி கடை படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்ஸ்டர்நேஸ்னல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏன் கல்யாணி… இணையத்தில் கவனம் பெறும் கூலி நடிகர் கண்ணா ரவி போஸ்ட்!