Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மூக்குத்தி அம்மன் 2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் இணைகிறாரா சுந்தர்.சி?

Karthis Next Movie Update : தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராகவும், நடிகர்களில் ஒருவராகவும் இருந்து வருபவர் சுந்தர் சி. இவரின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து கார்த்தியுடன் படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

மூக்குத்தி அம்மன் 2 படத்தைத் தொடர்ந்து கார்த்தியுடன் இணைகிறாரா சுந்தர்.சி?
சுந்தர் சி மற்றும் கார்த்திImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 22 Aug 2025 17:15 PM

இயக்குநர் சுந்தர் சியின் (Sundar C) இயக்கத்திலும், நடிப்பிலும் இறுதியாக வெளியான திரைப்படம் கேங்கர்ஸ் (Gangers). மேலும் அவருடன் நடிகர் வடிவேலு (vadivelu) மற்றும் நடிகை கேத்ரின் தெரேசா இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025 ஆம் ஏப்ரல் இறுதியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2). இப்படத்தில் நடிகை நயன்தாரா (Nayanthara) முன்னணி கதாநாயகியாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரெஜினா, ஊர்வசி, யோகி பாபு, அபிநயா, மைனா நந்தினி, துனியா விஜய் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி, புதிய படத்தை இயக்கவுள்ளாராம்.

அந்த படத்தில் நடிகர் கார்த்தி (Karthi) முன்னணி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. மேலும் இயக்குநர் சுந்தர் சி விஷாலை வைத்தும் புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதில் எந்தப் படம் முதலில் உருவாகும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிங்க : கல்யாணி பிரியதர்ஷனின் ‘லோகா’ – வெளியான சூப்பர் அப்டேட் !

நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு

 

View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

நடிகர் கார்த்தியின் புதிய படங்கள்

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் மற்றும் சர்தார் 2 போன்ற படங்களானது, ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகளிலிருந்து வருகிறது. இந்த படங்களானது இந்த 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதில் சர்தார் 2 படமானது வரும் 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :  சிரஞ்சீவியின் பிறந்தநாள்.. வெளியானது ‘விஸ்வம்பரா’ படத்தின் தமிழ் கிளிம்ப்ஸ் வீடியோ!

மார்ஷல் திரைப்படம் :

நடிகர் கார்த்தியின் நடிப்பில் 29வது திரைப்படமாக உருவாகிவருவது மார்ஷல். இந்த படத்தை டாணாக்காரன் என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இயக்கி வருகிறார். இவர் படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி மீனவனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் முன்னை கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.