Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

 மதராஸி படத்தின் இசை – ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!

Madharasi Movie Trailer: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மதராஸி. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 மதராஸி படத்தின் இசை – ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
 மதராஸிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2025 12:52 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் அமரன். மறைந்த ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கி இருந்தார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனாக நடித்து இருந்தார். அவரது மனைவி கதாப்பாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து இருந்தார். இவர்களுன் இந்தப் படத்தில் பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அந்தப் படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றது.

மதராஸி படத்தின் இசை – ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து முன்னதாக சலம்பல என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வருகின்ற 24-ம் தேதி ஆக்ஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… கூலி படத்தில் மாஸ் காட்டிய உபேந்திராவின் மனைவி அஜித் பட நடிகைதானாம்… யார் தெரியுமா?

மதராஸி படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… தனது 100-வது படம் குறித்து சுவாரஸ்யமாக பேசிய நாகர்ஜுனா – வைரலாகும் வீடியோ!