Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனது 100-வது படம் குறித்து சுவாரஸ்யமாக பேசிய நாகர்ஜுனா – வைரலாகும் வீடியோ!

Actor Nagarjuna: சமீபத்தில் வெளியான கூலி படத்தில் சைமன் என்ற வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார் நாகர்ஜுனா. தற்போது பான் இந்தியா அளவில் பேசப்பட்டு வரும் நடிகர் நாகர்ஜுனா அவரது 100-வது படம் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தனது 100-வது படம் குறித்து சுவாரஸ்யமாக பேசிய நாகர்ஜுனா – வைரலாகும் வீடியோ!
நாகர்ஜுனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2025 22:30 PM

நடிகர் நாகர்ஜுனா (Nagarjuna) நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரடித் தமிழ் படத்தில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்தப் படம் தான் கூலி. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனா மாஸ் வில்லனாக நடித்து இருந்தார். படத்தில் நாயகனுக்கு ரசிகர்களிடையே எப்படி வரவேற்பு இருந்ததோ அதே போல வில்லனான நாகர்ஜுனாவிற்கும் பெரும் வரவேற்பு உள்ளது. கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு கூலி படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்தே நடிகர் நாகர்ஜுனா தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. படத்தில் அவரது ஸ்டைலிசான லுக்கிற்கு ரசிகைகள் பலர் சொக்கிப்போய் தற்போது தொடர்ந்து நாகர்ஜுனாவின் வீடியோவைப் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் நாகர்ஜுனா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன ரட்சகன் படத்தில் இருந்து வெளியான பாடகளை தற்போது உள்ள இளம் பெண்கள் பதிவிட்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிப்பவர்களுக்கு வரவேற்பு கிடைப்பது புதிதான விசயம் இல்லை என்றாலும் 60 வயதைக் கடந்த நடிகரைப் பெண்கள் ரசித்துக் கொண்டாடுவது நம்ம ஊர் இளைஞர்களுக்கு கடுப்பாகவே உள்ளதை. அதனை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

100-வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த நாகர்ஜுனா:

இந்த நிலையில் நடிகர் நாகர்ஜுனா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது 100-வது படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவரது 100-வது படத்தை கோலிவுட் சினிமா இயக்குநர் கார்த்திக் இயக்க உள்ளதாக தெரிவித்தார். இவர் தமிழில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கூலி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அவரது 100 வது படம் தான் நிச்சயமாக எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார். மேலும் இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஃபேமிலி ட்ராமாவை மையமாக வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

இணையத்தில் கவனம் பெறும் நாகர்ஜுனா பேச்சு:

Also Read… 9 வருடங்களை கடந்த தர்மதுரை படம்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?